)
Tamil Nadu Government: இந்த ஆண்டு ஜனவரி தமிழ்நாடு மக்களுக்கு ஜாக்பாட் தான். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 3000 ரூபாய் ரொக்கப் பணமாக கிடைக்கப்போகிறது. இதுதவிர சில குடும்பங்களுக்கு கூடுதலாக 3000 ரூபாய் கிடைக்கும். அந்தவகையில் எந்தெந்த திட்டத்தில், யாருக்கெல்லாம் ஸ்பெஷலாக இந்த 6000 ரூபாய் கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி மற்றும் சர்க்கரை அட்டைதாரர்ளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துவிட்டது. இந்த ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தலா 3000 ரூபாய் கிடைக்கும். இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை தமிழ்நாடு அரசு இன்று முதல் தொடங்கிவிட்டது. வீடு வீடாக சென்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு டோக்கன்களை நியாயவிலைக் கடை பணியாளர்கள் விநியோகித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் எக்காரணத்தைக் கொண்டும் இப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது என கூட்டுறவுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் பலருக்கு கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையும் கிடைக்கும். புதிய பயனாளிகள், பழைய பயனாளிகள் எல்லோரையும் சேர்த்து 1.30 கோடி பெண்கள் இம்மாதம் தலா 1000 ரூபாய் பெறுகின்றனர். பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இந்த தொகையும் சேர்த்தால் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு 4000 ரூபாய் இம்மாதம் கிடைக்கும்.
புதுமைப் பெண் திட்டம்
இந்த இரு திட்டங்களிலும் பயனாளிகளாக இருப்பவர்களில் சிலர் புதுமைப் பெண் திட்டத்திலும் பயனாளிகளாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மிக சொற்ப அளவு என்றாலும், தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத்தொகையுடன் சேர்த்து புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் பெண்களும் இருக்கின்றனர். அண்மையில் தமிழ்நாடு அரசு நடத்திய வெல்லும் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்ட குடும்ப பெண் ஒருவர், தன்னுடைய மகனுடன் சேர்ந்து கல்லூரியில் படிப்பதால் மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப் பெண் திட்டத்தில் பெறுவதுடன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
இதனால், இரு திட்டங்களிலும் சேர்த்து மாதம் 2000 பெறுவதாக கூறினார். அதனால், இத்திட்டத்திலும் பயனாளியாக இருக்கும் பெண்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சேர்த்து 5000 ரூபாய் கிடைக்கும். ஒருவேளை குடும்ப பெண் இல்லாமல், கல்லூரி மாணவி இருந்து அவரும் புதுமைப் பெண் திட்டத்தில் பயனாளியாக இருந்தால் கூட ஆயிரம் ரூபாய் அக்குடும்பத்துக்கு இம்மாதம் கிடைக்கும்.
தமிழ் புதல்வன் திட்டம்
மேலே சொல்லப்பட்டுள்ள திட்டங்களில் எல்லாம் பயனாளியாக இருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவன், கல்லூரியில் படிக்கிறார் என்றால், அவர் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயனாளியாக இருக்கிறார் என்றால், அவருக்கும் இம்மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இவற்றையெல்லாம் சேர்த்தால், ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இம்மாதம் 6000 ரூபாய் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாடு அரசு கொடுக்கும் இந்த ரொக்கப்பண உதவிகளால் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னுரிமை ரேஷன் கார்டு, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் கார்டு, சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்காது. மேலே சொல்லப்பட்டுள்ள மற்ற திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளிலும் இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயனாளியாக இருக்க முடியாது. எனவே, இவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு ஜனவரி மாதம் கொடுக்கும் 6000 ரூபாய் கட்டாயம் கிடைக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ