நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தடை செய்யப்படுமா? அதிமுக மனு! உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Nalam Kaakum Stalin Scheme: நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் போட்ட உத்தரவு மற்றும் வழக்கு பின்னணி குறித்து முழுத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 31, 2025, 04:42 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தடை செய்யப்படுமா? அதிமுக மனு! உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

HC Refuses To Ban Nalam Kaakum Stalin Scheme: ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கவுள்ள நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு திட்டத்தின் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என்ற விளக்கத்தை ஏற்று தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான முழுமையான விவரங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

அதிமுக வழக்கு

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.வி. சண்முகம் மற்றும் சென்னை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் இணையன் ஆகியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகளை தொடர்ந்திருந்தார்கள்.

மனுவில் கூறப்பட்டது என்ன:

அந்த வழக்கின் மனுவில், குறிப்பாக "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம் பெற்றுள்ளதாகவும், அதேபோல முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். இது வந்து உச்சநீதிமன்ற தேர்வுக்கு முரணானது என்றும், அரசின் திட்டத்தில் ஒரு தனி மனித சாதனையை போல விளம்பரப்படுத்துவது தவறானது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்கள். எனவே ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்க இருக்கக்கூடிய அந்த மருத்துவ திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை:

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா மற்றும் சுந்தர் மோகன் ஆகிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டி.வி.சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் வாதாடுகையில், "முதல்வரின் முகவரி துறை சார்பில்,  "உங்கள ஸ்டாலின்" என்ற பெயரில் 10,000 முகாமல் நடத்தப்படுவதாகும். இது உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணை விதிகளுக்கு எதிரானது. மேலும் இந்த திட்டம் "முதலமைச்சர் திட்டம்" என்று போயிருந்தால் பரவாயில்லை. ஆனால் அதில் "ஸ்டாலின்" பெயர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அரசினுடைய விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர்களினுடைய சின்னங்களும் இடம்பெறக்கூடாது. ஆனால் சின்னங்கள் இடம் மற்றும் தலைவர்கள் படம் இடம் பெற்ற விளம்பரங்கள் வெளியாகி வருகிறது. அதேபோல ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கப்பட இருக்கக்கூடிய அந்த மருத்துவ திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடியது:

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் ஆஜரான அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதாடுகையில், "அரசு தரப்பு விளம்பரங்களில் முதலமைச்சர் படம் மட்டுமல்ல, துறை சார்ந்த அமைச்சர்களின் படங்களையும் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். 

மனுதாரர்கள் தாக்கல் செய்திருக்கக்கூடிய தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் கொண்ட விளம்பரம் அரசு விளம்பரம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார். அரசு விளம்பரத்தில் வெளியாகும் செய்திகளில் மக்கள் தொடர்பு துறையின் சீரியல் எண் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அரசு விளம்பரங்களில் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் பெயர் இடம் பெறலாம் என்று நீதிபதிகள் முன்பு தெளிவுபடுத்தினார். 

திமுக மூத்த வழக்கறிஞர் சொன்னது:

அதேபோல திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் பேசும் போது, "பொய் வழக்கை தொடர்ந்துள்ளார்கள் என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஏற்கனவே கடந்த ஆட்சியில் "அம்மா கேண்டின், அம்மா சிமென்ட்" உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மத்திய அரசு பிரதமர் மோடியின் பெயரில் "நமோ திட்டம்" தொடங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அதேபோல அண்டை மாநிலமான ஆந்திராவில் "ஜெகன்மோகன் திட்டம்" என்ற பெயரிலும் தொடங்கப்பட்டதையும் அவர் வந்து குறிப்பிட்டார். 

தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு:

அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் திமுக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுருக்கிறார். 

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். அதே சமயம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ திட்டத்தை துவங்க தடைவிதிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டனர்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்றால் என்ன?

"நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. முழு உடற் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ரூ.15,000/- வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000/-வரை செலவாகும். முழு உடற் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் இந்த மகத்தான திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் எப்பொழுது தொடங்கப்படும்? 

இந்தத் திட்டம் வருகின்ற 02.08.2025 அன்று திறந்து வைக்கப்படும். அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், "நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்" ஆகஸ்ட் 02, 2025 அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிவைக்கிறார்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு என்ன?

இந்த திட்டத்தின் மூலம் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை,எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இடம்பெறவிருக்கிறது.

மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

மேலும் படிக்க - குட் நியூஸ்! அங்கன்வாடி ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News