உதயநிதி ஏன் வரக்கூடாது? அவர் உழைக்கிறார் வருவார் - அமைச்சர் ஐ பெரியசாமி!

நாம் அனைவரும் ஒரே குடும்பம். திமுக என்பது ஒரே குடும்பம் தான். யார் இல்லை என்று கூறினார்? எங்கள் குடும்பத் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலினும் வருவார் - அமைச்சர் ஐ பெரியசாமி.  

Written by - RK Spark | Last Updated : Jan 12, 2026, 09:31 PM IST
  • அரசியலில் No Retirement.
  • நாங்கள் Retirement ஆகுவோம் என்று..
  • கனவு காணாதீர்கள் - அமைச்சர் ஐ பெரியசாமி.
உதயநிதி ஏன் வரக்கூடாது? அவர் உழைக்கிறார் வருவார் - அமைச்சர் ஐ பெரியசாமி!

திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் அமைச்சர் ஐ பெரியசாமி மேடையில் பேசும்போது, ஆத்தூரில் சேர்மனாக இருந்த மேரியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. மேரியின் பதவி காலமே முடிந்து விட்டது அவர் Retired ஆகவில்லை. அரசியலில் No Retirement - ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் Retirement ஆகுவோம் என்று கனவு காணாதீர்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 96 வயது வரை அரசியலில் இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அதேபோல் முதலமைச்சரும் 100 வயது வரை தமிழ்நாட்டை ஆளப் போகிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான 5 முக்கிய காரணங்கள்

குறைகள் இல்லாமல் யாரும் இல்லை

யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை என்று நினைத்து விடாதீர்கள். குறைகள் இல்லாமல் யாரும் இல்லை. அனைவருக்கும் கனவு இருக்கும். எதையும் வெளிப்படையாக கூற முடியாது. மாமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் மேயராக இருந்தாலும் உங்களது கனவு வீண் போகாது நான் இருக்கும் வரை.  திண்டுக்கல்லில் திமுக உறுப்பினர்களின் உழைப்பு வீண் போகாது. நம்மிடத்தில் சாதி பாகுபாடு என்பது இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே குடும்பம். திமுக என்பது ஒரே குடும்பம் தான். யார் இல்லை என்று கூறினார்? எங்கள் குடும்பத் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலினும் வருவார். உதயநிதி வரக்கூடாது என என்ன இருக்கிறது. மற்றவர்கள் வரவில்லையா? ஏதோ காரணத்திற்காக பேச வேண்டும் என நினைக்கின்றனர். அவர் உழைக்கிறார் வருவார். அந்த குடும்பத்தில் உழைப்பு இருக்கிறது, தியாகம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்காக பல நன்மைகளை செய்துள்ளனர்.

ஆட்சியில் பங்கு இல்லை

ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, ஆட்சியில் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். யார் எது வேண்டுமானாலும் கேட்கலாம். முடிவு முதலமைச்சர் கையில் உள்ளது. பொங்கல் பரிசு தொகை கொடுப்பதால் விவசாயத்திற்கு புதிய கடன் வழங்க முடியாது அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.நிதி நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதிமுக ஆட்சியைப் போல் குளறுபடி கிடையாது. அனைத்து திட்டங்கள் மூலமும் அரசின் வருவாய் உயர்த்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். நிதி நிலையை கையாளுவதில் தமிழக அரசு போல் இந்தியாவில் எந்த அரசும் இருக்க முடியாது.

ராமதாஸ் திமுக

அதிமுகவிடம் வரும் தேர்தலில் பாஜக 50 இடத்திற்கு மேல் கேட்பது குறித்த கேள்விக்கு, அதிமுக கட்சி விவகாரம். அதில் எந்த கருத்தும் இல்லை. எத்தனை சீட்டு வாங்கினாலும் நிற்காமல் போனாலும் கவலையில்லை. ராமதாஸ் திமுகவிற்கு வாழ்த்து கூறியது குறித்த கேள்விக்கு, நல்லாட்சி தான் அதனை மறுப்பதற்கு எதுவும் இல்லை. அனைத்து துறைகளிலும் தலை உயர்ந்து நிற்கிறது. அனைத்து துறைகளிலும் உயர்ந்து இருக்கும் தலைவராக முதலமைச்சர் உள்ளார். விஜய் இடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்த கேள்விக்கு, அதைப்பற்றி ஒன்றும் இல்லை. அவர் முதலில் தேர்தலுக்கு வரட்டும். தேர்தலை சந்தித்த பின் தான் அவர் பின்பு என்ன பலம் இருக்கிறது என்று தெரியும். தோராயமாக என்ன பலம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்பு அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். இது திமுக சரித்திரத்தில் இல்லை. இனி வருகின்ற 2026 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவார். இதுவரை இல்லாத அளவில் Record Break செய்வார். பெண்களுக்கான இனிப்பான செய்தி என்ன என்ற கேள்விக்கு, விடுபட்ட மகளிர்களுக்கும் மகளிர் உதவித்தொகை கொடுக்கப்படும். திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ராமதாஸ் உள்ளத்தில் இருந்து உண்மையை கூறியுள்ளார். நல்லாட்சி என்று கூறியுள்ளார். தேர்தல் தலைமை இருப்பதால் மற்றவர்களுக்கு சொல்ல அச்சமாக உள்ளது. இல்லையென்றால் அனைவரும் நல்லாட்சி என்றே கூறுவார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நல்லாட்சி என்று டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியுள்ளார்.

மேலும் படிக்க - பொங்கல் விடுமுறை ஐந்து நாட்கள் கிடைக்குமா? மக்கள் கோரிக்கை.. தமிழக அரசு தீவிர ஆலோசனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News