காதலனை வைத்து கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! வெளிநாட்டில் இருந்து போட்ட மாஸ்டர் ப்ளான்..பின்னணி என்ன?

வாணியம்பாடி அருகே கணவனை கள்ளக்காதலனை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 9, 2025, 05:32 PM IST
  • வெளிநாட்டில் இருந்தபடி கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டுள்ளார்.
  • வாணியம்பாடி அருகே பள்ளி காவலாளியை கள்ளக்காதலன் கொலை செய்தார்
  • அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
காதலனை வைத்து கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! வெளிநாட்டில் இருந்து போட்ட மாஸ்டர் ப்ளான்..பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் இஃர்பான். இவரது மனைவி ஹாஜிரா. துபாயில் வேலை செய்து வருகிறார். இர்ஃபான், இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாச்மேனாக வேலை செய்து வந்தார். கடந்த 7ஆம் தேதி காலை வீட்டில் இருந்து மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்  இஃர்பானை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார்.

Add Zee News as a Preferred Source

இதில் பலத்த காயமடைந்த இர்பான், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இஃர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் தனியார் பள்ளி காவலாளி இர்பானை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது, திருப்பத்தூர் பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்த சல்மான் என்பது தெரியவந்தது. மேலும் இர்ஃபான் மனைவி ஹாஜிராவின் தங்கை கணவர் தான் சல்மான் எனவும் போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் படிங்க: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்!

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஆத்து மேடு சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இர்பானை கொலை செய்துவிட்டு பெங்களூர் தப்பி ஓடிய சல்மானை பிடிக்க எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதையடுத்து சல்மானின் செல்போன் எண்ணை வைத்து பெங்களூரில் தணிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் வாணியம்பாடி அழைத்து வந்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இர்ப்பானின் மனைவி ஹாஜிராவுக்கும் அவருடைய தங்கை கணவர் சல்மானுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து சல்மானின் மனைவி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது போலிசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் ஹாஜிராவை சல்மான் துபாய்க்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அப்போதிலிருந்தே இர்ப்பானுக்கும் சல்மானுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் ஹாஜிராவும், சல்மானும் நெருக்கமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஹாஜிராவின் 2 பெண், 1 ஆண் குழந்தைகளில் 2 குழந்தைகளை சல்மானிடம் வளர வேண்டும் என்று ஹாஜிரா கூறி உள்ளார்.

ஹாஜிரா  இன்னும் 6 மாதங்களில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதும், சல்மான் உடன் வாழ திட்டமிட்டுள்ளார். இதனால் சல்மான், ஹாஜிராவின் 2 குழந்தைகளை அழைத்து வர இர்ஃபான் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இர்ஃபான் குழந்தைகளை அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளர். 

இதனால் ஆத்திரமடைந்த சல்மான், இர்ஃபானை கொலை செய்ய முடிவு செய்து வாணியம்பாடிக்கு வந்துள்ளார். இர்ஃபான் தனியார் பள்ளிக்கு வாச்மேன் வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்று வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து பெங்களூருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி நகர போலீசார் சல்மான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாணியம்பாடியில் மனைவிக்கும் மனைவியின் தங்கை கணவருக்கும் இடையே இருந்து வந்த கள்ளக்காதலால் கணவர் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிங்க: ஜெயலலிதாவை ரஜினி எதிர்க்க முக்கிய காரணம்! ‘அந்த’ 1 சம்பவம்..30 வருட வலி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News