)
Vijay Rajinikanth Meet : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருக்கும் ரஜினிகாந்துக்கும், விஜய் ரசிகர்களுக்கும் எப்போதும் ஆகாது. இருவரும் ஏதோவொரு காக்கா-கழுகைப்பற்றி பேச, இருவரும் அவர்களுக்குள் இருக்கும் போட்டி-பொறாமையை பேசுவதாக பலரும பலவாறாக வதந்திகளை பரப்பினர். விஜய்யை போலவே ரஜினிகாந்தும் ஒரு காலத்தில் அரசியல் மீது ஈடுபாடு கொண்டிருந்தவர்தான். குறிப்பாக, 90களில் வெளிவந்த தனது படங்களில் தான் கண்டிப்பாக அரசியலுக்குள் வரப்போவதற்கு ஹிண்ட் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் இறுதியில் அவர் அரசியலுக்கு வரும் முயற்சி தோற்றுப்போனது. இதையடுத்து, விஜய் தான் கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் முதல்வர் பதவியை அடைந்திருப்பதையடுத்து, ரஜினிகாந்த் அவரை முதல்வர் சீட்டில் உட்கார விடாமல் இருக்க சதி செய்ததாக வதந்தி பரவியது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து விளக்குவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
ரஜினிகாந்த், அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைக்க தூது போனதாக முதல்வர் விஜய் ஆட்சியமைப்பதற்கு முன்பு தகவல் பரவியது. இதற்கு சான்றாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவர் விசிட் செய்த சம்பவம் எடுத்துக்காட்டப்பட்டது. இது குறித்து விளக்கம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அப்படிப்பட்ட தரம் கெட்ட ஆள் நான் கிடையாது என்றும், ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றது தனக்கு மன வருத்தமாக இருந்ததால் அவரை நட்பு ரீதியாக நேரில் சந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
விஜய் வெற்றி பெற்ற போது அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்ததாகவும், பலரும் விஜய்யின் மீது தான் பொறாமை படுவதாகவும் தெரிவித்த அவர், அவருக்கும் தனக்கும் 25 வருட ஜெனரேஷனல் இடைவேளி இருப்பதாகவும், அப்படி பொறாமைப்பட்டால் அது தன் வயதிற்கு நன்றாக இருக்காது என்றும் கூறினார்.
“நான் 2016ல அரசியலுக்கு வரேன்னு சொன்னபோது ஏர்போர்ட்டில் மீடியாக்காரங்க இருப்பாங்க அவர்களுக்கு பதில் சொல்வது வழக்கம்... அதேபோல் . மீடியா காரங்க இருப்பாங்களான்னு கேட்டபோது மீடியாக்காரர்கள் இல்லை என்று சொன்னார்கள்... திடீர் என்று ஒரு சின்ன போன் வைத்துக்கொண்டு ஒருவர் கேள்வி கேட்க அவர் மீடியாக்காரன் இல்லாதது போல் எனக்கு தெரிந்தது... திடீரென்று வந்து விஜய் சிஎம் ஆயிட்டாரு அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேள்விகள் எழுப்ப,... நான் ஷாக் ஆயிட்டேன் மீடியா மாதிரியே தெரியல எனக்கு.. நான் சிரித்துக் கொண்டே போய் விட்டேன்.. அதற்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று ஒரு விமர்சனம் வைக்கிறார்கள்.. மற்றொன்று விஜய் மேல் எனக்கு பொறாமை என்று.
நான் அரசியலில் இல்ல அரசியலில் இருந்து விலகி விட்டேன் நான் அரசியலில் இல்லாத போது எனக்கு ஏன் அவர் மேல் பொறாமை.. ஒருவேளை கமலஹாசன் முதலமைச்சராக வந்திருந்தா பொறாமை வந்திருக்குமோ தெரியாது....அப்போ கூட வந்திருக்காது... கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது கிடைக்காது... எனக்கும் விஜய் க்கும் ஒரு ஜெனரேஷன் கேப் இருக்கு. கிட்டத்தட்ட 25 வருடம்.. நான் முதலிலேயே சொல்லி இருக்கேன் நான் வந்து விஜய கம்பேர் பண்ணா அது எனக்கு நல்லதல்ல கெட்ட பேரு.. விஜய் என்ன கம்பேர் பண்ண அது அவருக்கு கெட்ட பேரு.
விஜயை நான் சின்ன வயசுல இருந்து அவரை பார்த்துகிட்டு இருக்கேன்.. அவர் முதலமைச்சர் ஆனதில் எனக்கு என்ன பொறாமை... அதுவும் இந்த சின்ன வயசுல 52 வயசுல எம்ஜிஆர் என்டிஆர் சாதனை பண்ணத விட ஜாஸ்தி.. கம்ப்ளிட்டா சென்டர் பிஜேபி.. எவ்ளோ பெரிய பவர்ஃபுல் சென்டர்.. இங்க ரெண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளா வந்து ஜெயிச்சிருக்காங்க.. அதுவும் சினிமா இண்டஸ்ட்ரில இருந்து எனக்கு பொறாமை இல்ல ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம்.. சோ எனக்கு பொறாமை இல்ல விஜய் அவங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு ஜனங்க கிட்ட.. அந்த எதற்கு எதிர்பார்ப்பு எல்லாம் அவர் சந்திச்சு மக்களுக்கு நல்லது செய்யணும்.. செய்வாங்க.. என்ற நம்பிக்கை இருக்கு... அவருக்கு வாழ்த்துக்கள்.. பதவியேற்பு விழாவின்போது ஜெயலலிதா அவர்கள் ஆசைப்பட்டிருந்தாங்க நான் போயிருந்தேன் அது மட்டும் சொல்ல நினைத்தேன் மிஸ் ஆயிடுச்சு... நினைவு கூர்கிறேன்..” என்று அவர் பேசியிருந்தார்.
தமிழ்நாட்டின் முதல்வரான விஜய்யும், ரஜினியும் ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்களுக்குள் ஏதோ மனஸ்தாபம் இருப்பதாக பலரும் நம்புவது, இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டால் தீரும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது.
இருப்பினும், ரஜினி - விஜய் சந்திக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ரஜினியை சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றால் தீர்வு கிடைக்கும் என்றும், அவரை சந்திக்க ரஜினி அனுமதி தர வேண்டும் என்பதில் சிக்கல் நீடிப்பதால் இன்னும் இந்த மனஸ்தாபம் மேட்டர் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகளை எடுத்து பேச ஆரம்பித்தால் அது விவாதப்பொருள் ஆகும் என்று முதல்வரிடம் உளவுத்துறை ரிப்போர்ட் போயிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சந்திப்பு எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்பது தெரியவில்லை.