காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் - நயினார் நாகேந்திரன்!

7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். முழுமையான செய்தியை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2025, 04:09 PM IST
  • தவெகவுடன் பாஜக கூட்டணியா
  • நீங்க சொல்லுகிற அரசல் புரசல் எனக்கு தெரியல.
  • நயினார் நாகேந்திரன் பதில்.
காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் - நயினார் நாகேந்திரன்!

காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய 70 வது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்க தீர்த்த திருக்குளத்தில், சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார். இவ்விழாவில் பங்கேற்ற பின்பு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு குறித்த கேள்விக்கு, காஞ்சி காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் என அவர் பதிலளித்தார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்... ஸ்டாலின் அதிரடி - என்ன காரணம்?

மேலும் தவெகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதாக அரசல் புரசலாக பேசப்படுவது குறித்த கேள்விக்கு, நீங்க சொல்லுகிற அரசல் புரசல் எனக்கு தெரியல, நேற்று தான் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு நேரடியாக காமட்சியம்பாளை பார்க்க வந்திருக்கின்றேன், நாளைக்கு கோட்டையில் எல்லோரையும் பார்ப்போம் என பதிலளித்தார். மேலும் கள்ளக்குறிச்சி திமுக மதுபான விருந்திற்கும்,எங்களுக்கும் சம்பந்தமில்ல என திமுக நிர்வாகி சொல்லியிருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என  கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் வேலைகளை இப்பொழுது இருந்தே திமுக தொடங்கி இருந்தாலும் கூட வரும் சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதனை மக்கள் தான் தீர்மானிப்பாரக்ள் என நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வி.கே.சசிகலா பேட்டி

காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல்ல திருமண விழாவில் வி.கே.சசிகலா பங்கேற்று மாங்கல்யத்தை வாழ்த்தி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதனையடுத்து சோகண்டி பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் வி.கே.சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலாவிடம், இபிஎஸ் தவழ்ந்து சென்ற நிகழ்வு குறித்து பேசபடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுவெளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் அது பேசும் பொருளாக மாறும் என்பது இயற்கை என அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் எழுத்து வடிவிலே உள்ளதாகவும்,தமிழக சட்டசபையில் முதல்வர் போல் பேசாமல் திமுக தலைவர் என்ற முறையிலே பேசுகிறார் என்றும், விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் என வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரயில்வே, வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News