)
சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான 'Wonderla' பொழுதுபோக்கு பூங்கா, பழைய மகாபலிபுரம் சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், டிசம்பர் 1 ஆம் தேதி இந்த பூங்காவை திறந்து வைக்க, டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று வொண்டர்லா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுமார் 64 ஏக்கர் பரப்பளவில், 611 கோடி ரூபாய் செலவில் இந்த வொண்டர்லா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உயர் த்ரில் ரைடுகள், குடும்பங்களுக்கான சவாரிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் மற்றும் நீர் விளையாட்டுகள் என மொத்தம் 43 உலகத்தரம் வாய்ந்த சவாரிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு நாளைக்கு 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சோரா, ஸ்பின் மில், ஸ்கை ரயில் போன்ற, இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத சில பிரத்யேக ரைடுகளும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வொண்டர்லாவின் அடிப்படை டிக்கெட் விலை, வார நாட்களில் ரூ.1,489 (ஜி.எஸ்.டி உட்பட) ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.1,789 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும். மேலும், கல்லூரி மாணவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து 20% சலுகையை பெறலாம். குழுவாக வருபவர்களுக்கும், பருவ காலங்களுக்கும் ஏற்ப சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் முதல் நாளான, டிசம்பர் 2 ஆம் தேதி மட்டும், சிறப்பு சலுகையாக டிக்கெட் விலை ரூ.1,199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னையின் புதிய பொழுதுபோக்கு அம்சத்தை அனுபவிக்குமாறு பொதுமக்களை நிர்வாகம் அழைத்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் உணவு அரங்குகள், நிகழ்ச்சிகள், மற்றும் ஷாப்பிங் பகுதிகளும் இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள் போன்ற பிராந்திய கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான கடைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. மேலும், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக, பிரத்யேகக் குழுக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வொண்டர்லா நிர்வாகம் உறுதியளித்துள்ளது. பூங்காவிற்கு எளிதாக வந்து செல்ல, அரசுப் பேருந்துகளை வொண்டர்லா வரை இயக்க, போக்குவரத்துத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ