இழப்பில்லா டெங்குப் போர்: அரசு முன்னெடுக்கும் சிறப்பான கட்டுப்பாடு: மா.சுப்பிரமணியன்

டெங்கு காய்ச்சலில் ஒரு இழப்பு கூட இல்லாமல் கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2025, 07:22 PM IST
  • டெங்கு காய்ச்சலில் ஒரு இழப்பு கூட இல்லாமல் கட்டுபடுத்த நடவடிக்கை
  • ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி மருந்துகள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபப்டுகிறது.
இழப்பில்லா டெங்குப் போர்: அரசு முன்னெடுக்கும் சிறப்பான கட்டுப்பாடு: மா.சுப்பிரமணியன்

சென்னையை அடுத்த மேடவாக்கம் ஊராட்சியில் நலமுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பரிசோதனை மையங்களை ஆய்வு செய்தார். மாற்று திறனாளிகளுக்கு சான்று வழங்கினார். முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். 

Add Zee News as a Preferred Source

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது வரை 9 வாரங்களில் 333 இடங்களில் நடந்த முகாமில் 529258 பேர் பலன் அடைந்து வருகின்றனர். 10வது வாரமாக 39 இடங்களில் நடக்கிறது. இந்த முகாமில் சிறப்பு திட்டங்கள் மாற்று திறனாளிகளுக்கு சான்று வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1கோடியே 47 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். இந்த திட்டத்தில் புதிய குடும்பங்கள் இணைத்து அடையாள அட்டை வழங்கப்படுகிறது

இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தை, நரம்பியல், கண், பல் என 17 சிறப்பு மருத்துவம் பரிசோதனை மற்றும் சிகிச்சை நடக்கிறது. மக்கள் தேடி மருத்துவம் முலம் 2.5 கோடி மக்களுக்கு மருந்துகள் வ்ழங்கப்ப்டுகின்றன. இந்த முகாம் முலம் முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவம் பார்க்கப்படுகின்றது. 

பருவ மழை  காலங்களில் மக்கள் நல்வாழ்வு , ஊரக மற்றும் நகர்புற துறைகள் ஆலோசனை செய்து இணைந்து செயல்படுகின்றன. இதன் முலம் கடந்த 4.5 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பாடாத வகையில் செயல்படுகிறோம். 

ஒவ்வொரு மழை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ப்டுகின்றனர். டெங்கு காய்ச்சலால் கடந்த 2012 மற்றும் 2017ம்  அண்டுகளில் 65 மற்றும் 64 பேர் இறந்து உள்ளனர். இந்த ஆண்டு டெங்கு பாதிப்பில் 8 பேர் இறந்து உள்ளனர். டெங்கு பாதித்தவர் மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற வேண்டும். தனியாக ம்ருத்துகளை வாங்க கூடாது. இணை நோய் பாதிப்பு இருந்ததால் இறப்பு ஏற்பட்டது. ஒரு இறப்புக்கூட இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

தமிழகத்தில் 397 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்க்ள் முலம் 100 நாடுகளுக்கு ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்யப்ப்டுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி குறை கூறி அரசியல் செய்வது சரி அல்ல.  இது அவருக்கு தெரியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு  அவர் கூறினார்.

மேலும் படிக்க | இந்த மாவட்டங்களில் கனமழை பொழியும்.. வானிலை நிலவரம் என்ன?

மேலும் படிக்க | நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News