Udhayanidhi Stalin : திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர் எ.வ.வேலு, இளம் பெரியார் என புகழாரம் சூட்டினார். அவரைத் தொடர்ந்து பேசிய நீலகிரி எம்பி ஆ.ராசா, தம்பி வா.. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்து என அழைத்தார்.
தேர்தலுக்கு தயாரான திமுக
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், திமுக புயல் வேகத்தில் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டது. இதன் ஒரு பகுதியாகவே, திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருவண்ணாமலையில் நடந்தது.
முதலமைச்சருக்கு வரவேற்பு
இந்த கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படியே முதலமைச்சர் ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு வருகை தந்தார். இந்த கூட்டத்தில் மட்டும் 91 தொகுதிகளை சேர்ந்த 1 லட்சம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என தொடர்ந்து நான்காம் தலைமுறையாக திராவிட மாடல் நாயகர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார் என்றார். திராவிட இயக்கத்தை அடுத்த 50 ஆண்டுகாலம் நகர்த்திச் செல்ல இருக்கிறவர் நம் 5ஆவது தலைமுறை தளபதி உதயநிதி ஸ்டாலின் என்றும் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
"துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளன்று கருப்பு உடை அணிந்திருந்தார். நாங்களெல்லாம் பூரித்துப்போனோம். அப்படிப்பட்ட 'இளம் பெரியார்' உதயநிதியை தந்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. வருகிற சட்டமன் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று அமைச்சர் வேலு பேசினார்.
ஆ.ராசா பேச்சு
அமைச்சர் வேலுவைத் தொடர்ந்து பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, சனாதன சக்திகளுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் நின்று முழக்கமிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு சல்யூட் என்றார். தம்பி வா, திமுகவை எதிர்காலத்தில் வழிநடத்துக என்றும் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அழைப்பு விடுத்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஸ்டாலின், பிகாரின் வெற்றிக்குப் பிறகு தமிழ்நாடுதான் இலக்கு என்கிறார் அமித் ஷா, அவர்களை எதிர்க்க எங்கள் கருப்பு - சிவப்பு படை என்றுமே தயாராக இருக்கும் என்றார். தமிழ்நாடு என்றுமே தில்லியின் கட்டுப்பாட்டில் இருந்து அவுட் ஆஃப் கன்ட்ரோல், தமிழகத்தை குஜராத்தில் இருந்து கட்டுப்படுத்திவிடலாம் என்றால் அது நடக்காது எனவும் தெரிவித்தார். மேலும், மற்ற மாநிலங்களில் நுழைந்ததைப் போல தமிழ்நாட்டில் நுழைய முடியாது. திமுக இளைஞரணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் அது நடக்காது, மதம் பிடித்த யானை பாஜக என்பது நமக்குத் தெரியும். ஆனால், யானையை அடக்கும் அங்குசம் முதல்வர் கைகளில் உள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுகவை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், பழைய அடிமைகளுடன் புதிய அடிமைகளை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்கிறது பாஜக. அவர்களை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். ஆனால், நாம் தமிழக மக்களை நம்பி களத்தில் இருக்கிறோம். என்ஜின் இல்லாத கார் தான் அதிமுக. அதனை கட்டி இழுக்கிறது பாஜக என்னும் லாரி என கூறினார். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்க வேண்டும், 200 தொகுதிகளில் கட்டாயம் வெல்வோம் என தன்னுடைய உரையை நிறைவு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் படிக்க | Ration Card : PHH, PHH-AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









