திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை

இளைஞனின் வார்த்தைகளை முழுமையாக நம்பிய அந்தப் பெண், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு காதலுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 26, 2021, 10:43 AM IST
திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை

சென்னை: சென்னையில் திருமணமான பெண்ணுக்கு, வீட்டில் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறை கைது செய்தது.

சென்னை (Chennai) கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது பெண், ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருடைய கணவர் வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார். இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் நட்பாக இருந்த பழக்கம் இருவருக்கும் இடையே நாளடைவில் காதலாக மாறியது. வினோத்தின் ஆசை வார்த்தைகளை முழுமையாக நம்பிய அந்தப் பெண், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு லேட்டஸ்ட் காதலுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், நான்கு நாட்களுக்குள்ளாகவே இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டுக்கு திரும்பிய அந்த இளம்பெண், தான் செய்த தவறை மன்னித்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கணவரிடம் மன்றாடியுள்ளார்.

ALSO READ:மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மருமகன் கைது! 

இளம் பெண்ணின் கணவரும், மனைவியை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொண்டு இல்வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார். ஆனால், இளைஞர் வினோத்துக்கு அந்தப் பெண்ணின் மீதான காதல் மோகம் குறையவில்லை. அவருடன் வாழ்வதற்கு ஆசைப்பட்ட வினோத், வியாழக்கிழமை கணவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது, அந்தப் பெண் குளித்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது, தன்னோடு மீண்டும் வந்து வாழுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், வினோத்தின் பேச்சை நம்பாத அந்தப் பெண், அவருடன் செல்ல மறுத்துள்ளார். உடனடியாக அவரை மிரட்ட ஆரம்பித்துள்ளார் வினோத். அதாவது, தன்னிடம் இருக்கும் ஆபாசப் படங்களை குடியிருப்பு வாசிகளுக்கு அனுப்பிவிடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கும் இசைந்து கொடுக்காததால் இளம் பெண் தன்னோடு இருந்தபோது எடுத்த ஆபாச படங்களை கணவருக்கு அனுப்பி, தொந்தரவு (Sexual Harassment) செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை அறிந்த இளம் பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை முழுமையாக அறிந்துள்ளார். பின்னர், காவல்நிலையத்துக்கு சென்று வினோத் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த காவல்துறை (TN Police), வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 

ALSO READ:குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News