)
Crime News: இன்றைய காலத்தில் இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ், வியூஸ் அதிகமாக வாங்க வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதனைவிட்டு, அதில் ரீல்ஸ் பார்ப்பதையே சிலர் முழு நேர வேலையாக செய்து வருகின்றனர். இதனால், அவர்கள் வித்தியசமாக ரீல்ஸ் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு, அதிக வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்கள் பலரும் சில அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் உயிரையே பணயம் வைத்து, ரீல்ஸ் எடுக்கின்றனர். இது தொடர்பாக எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இளைஞர்கள் அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மீண்டும் அந்த செயலையே செய்கின்றனர்.
இதனால், தொடர்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இன்று அப்படியொரு சம்பவம் தான் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்துள்ளது. ரீல்ஸ் மோகத்தால் அவர் தனது உயிரையும் கொடுத்துள்ளார். அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேந்தவர் நீதிதாசன். இவரது மகன் அருண். இவருக்கு வயது 18. இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். தினமும் வீடியோக்களை பதிவிடும் வேலையை அவர் செய்து வந்தார்.
வியூஸ் அதிகம் பெற, விதவிதமாக புகைப்படங்கள், ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். வியூஸ் போதாததால், அருண் மற்றும் அவரது நண்பர்கள் வித்தியாவசமாக வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட முயன்றனர். இதற்காக, ரயிலின் மேல் பகுதியில் இளைஞர் ஏற முயன்றார். அதனை இரண்டு சிறுவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். அப்போ, இளைஞர் அருணின் கை, ரயிலின் மேல் தாழ்வாக சென்று கொண்டிருந்த, உயர் அழுத்த மின்கம்பி மீது பட்டுள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து அருண் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அருணுடன் ரயிலின் மேல் ஏறி, இரண்டு சிறுவர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. ரயில்களில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளக் கூடாது என பலமுறை இந்தியன் ரயில்வேயும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டால் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த விதிமுறைகளை இளைஞர்கள், சிறுவர்கள் சற்றும் மதிக்காமல் ஆபத்தான முறையில் பயணம் செய்து வீடியோ எடுத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், கடுமையாக விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ