ரூ.12,000 டிஸ்கவுண்ட் விலையில் விற்பனையாகும் Samsung Galaxy S25 Edge

Samsung Galaxy S25 Edge At Amazon: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடல் மிகவும் பாப்புலர் ஆகும். இதன் விலை மற்றும் இதில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 20, 2025, 12:48 PM IST
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது.
  • இதில் 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரூ.12,000 டிஸ்கவுண்ட் விலையில் விற்பனையாகும் Samsung Galaxy S25 Edge

Samsung Galaxy S25 Edge Offer At Amazon: சாம்சங் நிறுவனம் தற்போது மிக மெல்லிய கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் மிகவும் மெல்லிய 5.8மிமீ சேசிஸ் மற்றும் இலகுரக வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது கேலக்ஸி எஸ் தொடரில் மிக மெல்லிய ஸ்மார்ட்ஃபோன் ஆகும். சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடல் வெளியான நிலையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடல் மீதும் திடீர் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

உலகளவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் சீரிஸின் கீழ் அறிமுகமான நான்காவது ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிடன் சற்று குறைவாகும். 

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் ரூ.1,09,999 என்றும், 12GB + 512GB ஆப்ஷன் ரூ.1,21,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீ-ஆர்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 512GB மாறுபாட்டை 256GB விருப்பத்தின் விலையில் பெறலாம். அதாவது இதில் ரூ.12,000 தள்ளுபடியை பெறலாம். 

இதற்கிடையில் அமேசான் நிறுவனம் தனது வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.1,18,999 க்கு விற்பனை செய்து வருகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் முழுசாக ரூ.11,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பேங்க் ஆபரை உள்ளடக்கிய விலை ஆகும். 

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் | Samsung Galaxy S25 Edge Full Specifications: 
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில் இதில் பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 

இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.

மேலும் படிக்க | ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி... உடனே இந்த அப்டேட்டை தெரிந்து கொள்ளவும்..!

மேலும் படிக்க | Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News