Reliance Jio Affordable Plan: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் டேட்டா சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், OTT பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவையும் வழங்கும் திட்டங்களை வழங்குகின்றன. இதுபோன்ற பல திட்டங்கள் ஜியோ நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவிலும் கிடைக்கின்றன. இன்று நாம் ஜியோவின் அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி தான் காணப் போகிறோம். இந்த திட்டத்தில் நீங்கள் 168 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் பல OTT பயன்பாடுகளுக்கான சந்தாவைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் விலை மற்றும் பிற விவரங்களை இங்கே காணலாம்.
ஜியோவின் அசத்தலாம் அட்டகாசமான திட்டம்:
நாம் தற்போது பேசப் போகும் ஜியோ திட்டத்தின் விலை ரூ.1049 ஆகும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகிய பலங்களைப் பெறலாம். இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் மொத்தம் 168 ஜிபி அதிவேக டேட்டாவையும் நீங்கள் பெறுவீர்கள், அதாவது நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிவேக டேட்டாவின் வரம்பு தீர்ந்த பிறகு, இணையம் நின்றுப் போகாமல் தொடர்ந்து செயல்படும், எனினும் வேகம் 64 Kbps ஆகக் குறையும்.
திட்டத்தின் முழு அம்சத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள்:
இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் SonyLIV மற்றும் ZEE5 சந்தா ஆகும், இது JioTV மொபைல் செயலி மூலம் கிடைக்கும். அதாவது இந்த இரண்டு பிரபலமான OTT தளங்களின் பிரீமியம் உள்ளடக்கத்தையும் உங்கள் ஸ்மார்ட்போனில் அனுபவிக்க முடியும், இதில் சமீபத்திய திரைப்படங்கள், வலைத் தொடர்கள் மற்றும் நேரடி விளையாட்டுகளும் அடங்கும். இந்த வெவ்வேறு தளங்களுக்கு குழுசேர நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கலாம், ஆனால் இப்போது ஜியோவின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் இந்த சந்தாக்களை இலவசமாகப் பெறலாம்.
நன்மைகள் இத்துடன் நிறைவு பெறவில்லை. ஜியோவின் இந்த திட்டத்தில், பயனர்கள் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவைப் பெறுவார்கள், இது மொபைல் மற்றும் டிவி இரண்டிலும் செல்லுபடியாகும். இது தவிர, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோடிவிக்கு இலவச அணுகலை வழங்குகிறது, இந்த திட்டத்தில் நீங்கள் பல வகையான நேரடி தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கலாம். நீங்கள் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் சேமிப்பகத்தையும் பெறுவீர்கள், அங்கு உங்கள் முக்கியமான ஃபைல்ஸ் மற்றும் டேட்டாவை சேமித்துக்கொள்ளலாம்.
ரீசார்ஜ் செய்வது எப்படி?
MyJio ஆப் மூலம் ரீசார்ஜ் செய்ய, MyJio ஆப்பை பதிவிறக்கம் செய்து உள்நுழையவும், "Recharge" என்பதை கிளிக் செய்யவும். உங்கள் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடவும், ரீசார்ஜ் செய்ய விரும்பும் திட்டத்தைத் தேர்வு செய்யவும், பணம் செலுத்துவதற்கான வழிகளைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யுங்கள்.
Paytm மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால் Paytm இணையதளத்திற்குச் சென்று உள்நுழைந்து அங்கு "ரீசார்ஜ் & பே பில்ஸ்" பகுதிக்குச் செல்லவும், "மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் அதில் ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடவும், ரீசார்ஜ் செய்ய விரும்பும் திட்டத்தைத் தேர்வு செய்து பணம் செலுத்தவும்.
Google Pay, PhonePe போன்ற பிற மொபைல் பேமெண்ட் ஆப்ஷன்களையும் பயன்படுத்தலாம். இதில் சில இடங்களில் ஜியோ ரீசார்ஜ் வவுச்சர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க | Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ