ChatGPT இடம் பகிரக்கூடாத 5 முக்கிய தகவல்கள் இவைதான்: எச்சரிக்கும் டெக் நிபுணர்கள்

ChatGPT Latest News:  ChatGPT இடம் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்வது நல்லதா? எந்தெந்த தகவல்களை ChatGPT இடம் பகிரலாம்? எவற்றை பகிரக்கூடாது? இதை குறித்து நிபுணர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2025, 12:57 PM IST
  • வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம்.
  • கடவுச்சொற்கள் மற்றும் உள்நுழைவு விவரங்களைப் பகிர வேண்டாம்.
  • அலுவலக ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம்.
ChatGPT இடம் பகிரக்கூடாத 5 முக்கிய தகவல்கள் இவைதான்: எச்சரிக்கும் டெக் நிபுணர்கள்

ChatGPT: இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில், ChatGPT போன்ற AI கருவிகள் வாழ்க்கையை மிகவும் வசதியாக மாற்றியுள்ளன. மக்கள் மின் அஞ்சல்களை எழுதவும், தகவல்களைச் சேகரிக்கவும், அலுவலக வேலைகளைச் செய்யவும் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ChatGPT இடம் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகொள்வது நல்லதா? எந்தெந்த தகவல்களை ChatGPT இடம் பகிரலாம்? எவற்றை பகிரக்கூடாது? இதை குறித்து நிபுணர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source

ChatGPT இடம் அதிகப்படியான நெருக்கம் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகலாம். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

ChatGPT இடம் இந்த தகவல்களை கண்டிப்பாக பகிர வேண்டாம்:

- தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்

பெரும்பாலான மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, பெயர், முகவரி, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் போன்ற அவர்களின் தனிப்பட்ட விவரங்களை ChatGPT இடம் கூறுவதுதான். இந்தத் தகவல்கள் தவறான கைகளுக்குச் சென்றால், உங்கள் அடையாளம் திருடப்படலாம். ஆகையால், இவற்றை எப்போதும் பகிர வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம்

AI இடம் வங்கி தொடர்பான கேள்விகளைக் கேட்பதும் ஆபத்தானது. கணக்கு எண், அட்டை விவரங்கள் அல்லது UPI போன்ற முக்கியமான தகவல்களை AI இடம் கொடுப்பது நேரடியாக மோசடியை அழைப்பது போன்றதாகும். ஆகையால், இந்த முக்கிய தகவல்களை ChatGPT இடம் கண்டிப்பாக பகிர வேண்டாம்.

- கடவுச்சொற்கள் மற்றும் உள்நுழைவு விவரங்களைப் பகிர வேண்டாம்

உங்கள் பாஸ்வர்ட் மற்றும் பயனர் பெயர் போன்ற லாக் இன் விவரங்களை சாட்போட்டுடன் பகிர வேண்டாம். இந்தத் தகவல் கசிந்தால், உங்கள் சமூக ஊடகங்க தளங்கள் அல்லது வங்கிக் கணக்கில் யார் வேண்டுமானால் ஊடுருவலாம். இது மிகப்பெரிய ஆபத்துகளுக்கு ஆரம்பமாய் அகலாம்.

- அலுவலக ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம்

வாடிக்கையாளர் தரவு, ரகசிய குறியீடுகள் அல்லது திட்ட ஆவணங்கள் போன்ற நிறுவன ரகசியத் தகவல்களை AI -க்கு வழங்குவது அலுவலக கொள்கைக்கு எதிரானது. சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்களும் இதன் காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. ஆகையால், உங்கள் அலுவலக ரகசியங்களை ChatGPT உடன் பகிர்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

- மருத்துவரிடம் மட்டுமே மருத்துவ ஆலோசனை பெறுங்கள்

உடல்நலம், நோய்கள், சிகிச்சைகள் ஆகியவை தொடர்பான அறிக்கைகள் அல்லது காப்பீட்டு விவரங்களை AI உடன் பகிர்ந்து கொள்வது சரியல்ல. தவறான பரிந்துரைகள் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும், மேலும் தரவு கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் இந்த விவரங்களை மருத்துவர்கள், காப்பீட்டு நிபுணர்கள் ஆகியவர்களுடன் பகிர்வதே நல்லது.

மேலும் படிக்க | ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. வெறும் ரூ749 ரீசார்ஜ் செய்தால் போதும்

மேலும் படிக்க | நல்ல செய்தி! ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News