ஆதார் அட்டையை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? சுலபமான செயல்முறை இதோ

Aadhaar Card Update: இப்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதன் மூலம் ஆதார் அட்டையை  இலவசமாகப் புதுப்பிக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 3, 2025, 03:06 PM IST
  • ஆதாரை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?
  • ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
  • PoI மற்றும் PoA -ஐ அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் அட்டையை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? சுலபமான செயல்முறை இதோ

Aadhaar Card Update: இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு தனித்துவமான, முக்கியமான ஆவணமாக உள்ளது. மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை அவகாசம் உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த பணிக்கு முன்னர் இருந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள், அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) போன்ற தங்கள் விவரங்களில் மாற்றங்களைச் செய்யலாம்.

Add Zee News as a Preferred Source

ஜூன் 15, 2025 -க்கு பின் அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும்

பல நேரங்களில் மக்களின் தகவல்கள் அவர்களின் ஆதார் அட்டையில் தவறாக உள்ளிடப்படுகின்றன. இதன் காரணமாக, அவர்கள் பின்னர் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதன் மூலம் ஆதார் அட்டையை  இலவசமாகப் புதுப்பிக்கலாம். எனினும் ஜூன் 14, 2025 வரை மட்டுமே இதற்கு நேரம் உள்ளது. அதன் பின் இதை செய்ய கட்டணம் வசூலிக்கப்படும்.

கடைசி தேதிக்கு பிறகு, ஆதார் புதுப்பிப்புக்கு ரூ.50 நிலையான கட்டணம் செலுத்த வேண்டும். ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றில் மாற்றங்கள் செய்ய ரூ.50 செலவாகும். அதேசமயம், அருகிலுள்ள ஆதார் மையத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி ஆதாரைப் புதுப்பிக்கலாம்.

What is the benefit of updating Aadhar card? ஆதார் அட்டையை புதுப்பிப்பதன் நன்மைகள் என்ன?

ஆதார் வைத்திருப்பவர்கள், குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரைப் பெற்று, அதை ஒரு முறை கூட புதுப்பிக்காதவர்கள், இந்த இலவச சாளரத்தைப் பயன்படுத்திக் கொள்ள UIDAI ஊக்குவித்துள்ளது. உங்கள் தகவலைப் புதுப்பிப்பது உங்கள் ஆதார் பதிவின் துல்லியத்தை உறுதிப்படுத்த உதவுகிறது. மேலும் காலாவதியான விவரங்கள் காரணமாக சேவை இடையூறுகள் அல்லது அரசாங்க சலுகைகள் மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

How can I update my Aadhar card online at home? ஆதாரை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம். இதற்கான செயல்முறை இதோ:

To update PoI and PoA: PoI மற்றும் PoA -ஐ அப்டேட் செய்ய

- முதலில் https://myaadhaar.uidai.gov.in இல் உள்ள myAadhaar போர்ட்டலுக்கு செல்லவும்.

- உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

- PoI மற்றும் PoA க்கான செல்லுபடியாகும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.

- புதுப்பிப்பு கோரிக்கையைச் சமர்ப்பித்து, உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்க 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) சேமிக்கவும்.

To update your address online: உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்க:

- ஆதார் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலுக்குச் செல்லவும்.

- ‘Proceed to Update Address’ என்பதைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் புதிய முகவரியை உள்ளிட்டு தொடர்புடைய ஆதாரத்தைப் பதிவேற்றவும்.

- கோரிக்கையைச் சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக உங்கள் URN ஐக் குறித்து வைத்துக்கொள்ளவும்.

- அங்கீகரிக்கப்பட்டதும், புதுப்பிக்கப்பட்ட ஆதாரை அதே போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

What Is Aadhaar Card? ஆதார் அட்டை என்றால் என்ன?

ஆதார் என்பது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். இது அடையாளம் மற்றும் முகவரி சரிபார்ப்புக்கான முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. இது பல்வேறு அரசு திட்டங்கள், மானியங்கள் மற்றும் தனியார் சேவைகளை அணுகுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | WhatsApp Screen Share : வாட்ஸ் ஆப்பில் ஸ்கிரீன் ஷேர் செய்வது எப்படி செய்வது?

மேலும் படிக்க | ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. வெறும் 1 ரூபாய் இருந்தால் போதும், இந்த சிறப்பு சலுகை பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News