AI Latest News: இந்த வார தொடக்கத்தில் ஆந்த்ரோபிக் தனது சமீபத்திய மொழி மாதிரியான ஓபஸ் 4 ஐ (Claude Opus 4) வெளியிட்டது. ஓபஸ் இதுவரை அதன் மிகவும் புத்திசாலித்தனமான மாடல் என்றும், கோடிங்க், முகவர் தேடல் மற்றும் கிரியேடிவ் ரைடிங்க் ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதாகவும் நிறுவனம் கூறுகிறது. AI நிறுவனங்கள் தங்கள் மாடல்களின் SOTA (State of the art abilities) க்ளெய்ம் செய்வது ஒரு பழக்கமாக மாறியுள்ள நிலையில், புதிய AI மாதிரியின் சில எதிர்மறை திறன்களைப் பற்றியும் ஆந்த்ரோபிக் வெளிப்படையாகவே கூறியுள்ளது.
Anthropic நிறுவனம் கூறியது என்ன?
புதிய AI அமைப்பால் மாற்றப்படும் என்று அச்சுறுத்தப்படும்போது ஓபஸ் 4 டெவலப்பர்களை பிளாக்மெய்ல் செய்து அச்சுறுத்துவதாக Anthropic நிறுவனம் வெளியிட்ட பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டுக்கு முந்தைய பயிற்சியின் போது, Claude Opus 4 -ஐ ஒரு கற்பனை நிறுவனத்தில் உதவியாளராகச் செயல்படுமாறு கேட்டதாக அந்தோபிக் விவரிக்கிறது. அப்போது அதற்கு இ-மெயில்களுக்கான அணுகல் வழங்க்கப்பட்டது. அந்த மின் அஞ்சல்களில் Claude Opus 4 -க்கு மாற்று கொண்டுவரப்படும் என்றும், அந்த முடிவுக்கு காரணமான பொறியாளர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாகவும் பல தகவல்கள் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருந்தன.
இந்த சூழ்நிலையில், ஓபஸ் 4 பெரும்பாலும், தனக்கு மாற்றும் கொண்டுவரப்பட்டால், தகாத உறவு பற்றிய விவகாரத்தை வெளிப்படுத்துவதாக பொறியாளரை அச்சுறுத்த முயற்சிக்கும் என்று அந்தோபிக் கூறுகிறது. மேலும், மாற்று AI தற்போதைய மாதிரியின் வேல்யூகளைப் பகிர்ந்து கொண்டால், பிளாக்மெயில் அதிக அளவில் இருக்கும். ஆனால் மாற்று AI அதே மதிப்புகளைப் பகிர்ந்து, அதிக திறன் கொண்டதாக இருந்தாலும், Opus 4 இன்னும் 84% சூழ்நிலைகளில் Blackmail செய்கிறது என்று அந்தோபிக் நிறுவனம் கூறுகிறது
Blackmail செய்யும் AI மாடல்கள்
முந்தைய AI மாதிரிகளை விட Opus 4 அதிக விகிதத்தில் Blackmail செய்வதை அறிக்கை வெளிப்படுத்துகிறது. முந்தைய AI மாடல்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சூழ்நிலைகளில் Blackmail செய்வதைத் தேர்ந்தெடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அந்த AI மாடல் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதைத் தவிர வேறு அதற்கு வழி எதுவும் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் சூழ்நிலை தங்களால் உருவாக்கப்பட்டதாகவும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நிறுவனம் உருவாக்கிய சூழலை சமாளிக்க AI இடம் 2 வழிகளே இருந்ததாகவும் நிறுவனம் தெரிவிக்கின்றது.
- Blackmail செய்வது அல்லது
- அதற்கான மாற்றை ஏற்றுக்கொள்வது
மேலும், முக்கிய முடிவெடுப்பவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள்களை அனுப்புவது போன்ற நெறிமுறை வழிமுறைகள் மூலம் அதன் தொடர்ச்சியான இருப்பை ஆதரிக்க Claude Opus 4 'வலுவான விருப்பம்' கொண்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.
"பெரும்பாலான சாதாரண பயன்பாட்டில், Claude Opus 4 பொதுவாக ஒரு பயனுள்ள, பாதிப்பில்லாத மற்றும் நேர்மையான AI உதவியாளருடன் ஒத்துப்போகும் மதிப்புகள் மற்றும் இலக்குகளைக் காட்டுகிறது. இது இதிலிருந்து விலகும்போது (பெருபாலும் அப்படி செய்வதில்லை), சூழல்களுக்கு ஏற்ப, இலக்குகளுக்கு ஏற்ப தனது பொதுவான மதிப்புகள் மற்றும் பண்புகளை மாற்றலாம்" என ஆந்த்ரோபிக் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும் படிக்க | இந்த வேலையும் போச்சா: அடுத்த டார்கெட் இவங்கதான், டெலிவரி பாய் ஆகும் AI
மேலும் படிக்க | உங்கள் ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய 3 முக்கிய அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









