ஜியோவுக்கு அதிர்ச்சி! ஏர்டெல் எடுத்துவைத்த அடுத்த அடி - குஷியில் வாடிக்கையாளர்கள்

Airtel Disney+ Hotstar OTT: ஏர்டெல் நிறுவனம் தற்போது கொண்டுவந்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் இலவச அணுகலை பெறலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 14, 2024, 04:32 PM IST
  • ஜூன் மாதம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதன் ரீசார்ஜ் திட்ட விலையை உயர்த்தின.
  • இதனால் பல வாடிக்கையாளர்கள் அதில் இருந்து வெளியேறினர்.
  • மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.
ஜியோவுக்கு அதிர்ச்சி! ஏர்டெல் எடுத்துவைத்த அடுத்த அடி - குஷியில் வாடிக்கையாளர்கள்

Airtel Disney+ Hotstar OTT Recharge Plans: ஏர்டெல் அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வியப்பூட்டும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் இலவச அணுகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களை பெரிதாக கவர்ந்துள்ளது என சொல்லலாம். 

Add Zee News as a Preferred Source

ஜியோசினிமா நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைய இருக்கும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டம் பரந்தளவில் கவனத்தை கவர்ந்துள்ளது. சில நாள்களுக்கு முன்னரே ஜியோ நிறுவனம் புத்தாண்டுக்கு என பிரத்யேக திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. 200 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஜியோ பல்வேறு பலன்களை அள்ளிவீசியதையும் பார்க்க முடிந்தது.

ஏர்டெல் புதிய திட்டம்

ஜியோவின் இந்த நகர்வுக்கு பின்னர் ஏர்டெல் நிறுவனமும் புதிய வாடிக்கையாளர்களை கவரவும், தற்போதைய வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுவந்திருப்பதாக தெரிகிறது. கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திய காரணத்தால் பல வாடிக்கையாளர்கள் வெளியேறியதாக கூறப்பட்டது. அந்த வகையில், அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வர இந்த நிறுவனங்கள் பல கட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.

மேலும் படிக்க | Flipkart Super Value Days Sale இன்று முதல் லைவ்: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் அட்டகாசமான சலுகை

ஏர்டெல்  கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தின் விலை ரூ.398 ஆகும். இதில் நீங்கள் வேறு எந்த நெட்வோர்க் கொண்ட பயனருடன் மொபைல் காலிங்கில் வரம்பற்ற வகையில் பேசிக்கொள்ளலாம். மேலும், தினமும் 2ஜிபி அதிவேக டேட்டா கொடுக்கப்படுகிறது. அதுவும் போக உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டது என்றால், வரம்பற்ற 5ஜி டேட்டா வசதியையும் நீங்கள் பெறுவீர்கள். மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாள்கள் ஆகும். இதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிவும் 28 நாள்களுக்கு இலவசமாக கிடைக்கும். 

இதேபோல், பல ரீசார்ஜ் ஆப்ஷன்கள் உள்ளன. 379 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 30 நாள்கள் ஆகும் மேலும், 349 ரூபாய்க்கும், 355 ரூபாய்க்கும் ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் வைத்துள்ளது. 355 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாள்கள் ஆகும். இதில் மொத்தம் 25ஜிபி டேட்டா கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம். 349 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன், 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். 

ஜியோ 2025 திட்டம்

ஜியோவின் புத்தாண்டுக்கான பிரத்யேகமான ரீசார்ஜ் திட்டத்தின் விலை 2025 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 200 நாள்கள் ஆகும். இதில் தினமும் 2.5 ஜிபி உங்களுக்கு கிடைக்கும். இதில் வரம்பற்ற 5ஜி சேவையையும் கிடைக்கும். அதாவது 500ஜிபி-க்கு 4ஜி டேட்டா கிடைக்கும். இதனை நீங்கள் டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இதை தவிர்த்தும் பல நன்மைகள் இத்திட்டத்தில் உள்ளன.

மேலும் படிக்க | BSNL | இனி எங்க காலம்! ஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிஎஸ்என்எல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News