Airtel சூப்பர் ரீசார்ஜ் பிளான்.. 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா

Airtel 84 Days Recharge Plan: ஏர்டெல் சிம் பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.. கம்மி விலையில் அதிக டேட்டா பலனை எளிதாக பெறலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 18, 2025, 03:49 PM IST
  • வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
  • பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல்.
  • 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள்.
Airtel சூப்பர் ரீசார்ஜ் பிளான்.. 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா

Airtel 84 Days Recharge Plan Details: இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் வோடபோன் ஐடியா (vi), ஜியோ (Jio), ஏர்டெல்(Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மற்ற நிறுவனங்களை காட்டினாலும் மலிவான விலையில் பிஎஸ்என்எல் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருந்தாலும், மற்ற மூன்று நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்காத சில அம்சங்களையும் வழங்கி வருகிறது. அதிலும் ஏர்டெல் நிறுவனம் மக்களுக்கு நல்ல நெட்வொர்க் மற்றும் பல மலிவான மற்றும் உபயோகமான ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது.

Add Zee News as a Preferred Source

அதுமட்டுமின்றி ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் (Airtel Prepaid Recharge Plan) கூடுதல் சலுகைகளையும் தற்போது வழங்குகி வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பல நன்மைகளை நீங்கள் பெறலாம். இந்தத் திட்டத்தைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் காணலாம். 

மேலும் படிக்க | Reliance Jio... 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட... மலிவான சில சூப்பர் திட்டங்கள்

ஏர்டெல்லின் வியக்க வைக்கும் ரீசார்ஜ் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் தற்போது பல்வேறு விலை வரம்புகளில் பலவித ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பயனர்கள் தங்களின் பட்ஜெட் மற்றும் வசதிக்கேற்ப ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம். ஆனால், இப்போது நாம் காணப் போகும் ரீசார்ஜ் பிளானின் விலை ரூ.979 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல்லின் வலைத்தளத்தில் உள்ள "ட்ரூலி அன்லிமிடெட்" பிரிவில் நீங்கள் காணலாம்.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan):
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் நீங்கள் தினசரி 2ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். குறிப்பாக வேலிடிட்டி காலம் இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு கிடைக்கும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி ஐ பெற முடியும். இது தவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் மொத்தம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த ரீசார்ஜ் திட்டத்ததில் பெறலாம். அதனுடன் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மிரள வைக்க வருகிறது Realme P3.. போன் விலை குறித்த விவரங்கள் கசிவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News