Amazon Great Freedom Festival Sale 2025 ஆகஸ்ட் 1 தொடக்கம்: ஷாப்பிங்கிற்கு ரெடியா

Amazon Great Freedom Festival Sale 2025: ஆன்லன் விற்பனை தளமான அமேசான் இந்தியாவில் தனது கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 தேதியை அறிவித்துள்ளது. இந்த சேலில் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் முதலில் ஷாப்பிங் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2025, 03:12 PM IST
  • அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025 விற்பனை.
  • ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும்.
  • SBI கிரெடிட் கார்டில் சலுகைகள் கிடைக்கும்.
Amazon Great Freedom Festival Sale 2025 ஆகஸ்ட் 1 தொடக்கம்: ஷாப்பிங்கிற்கு ரெடியா

Amazon Great Freedom Festival Sale 2025: பிரபல ஆன்லன் விற்பனை தளமான அமேசான் தனது அடுத்த சேலுக்கு தயாராகிவிட்டது. அமேசான் இந்தியாவில் தனது கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 தேதியை அறிவித்துள்ளது. இந்த விற்பனை அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் தொடங்கும். 

Add Zee News as a Preferred Source

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 

- அமேசானின் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 -இல் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் முதலில் ஷாப்பிங் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். 

- இந்த விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தனி பாகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அமேசான் பிராண்ட் தயாரிப்புகளில் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெற முடியும். 

- இது தவிர, அமேசான் SBI கார்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் உடனடி தள்ளுபடிகள், பரிமாற்ற சலுகைகள் மற்றும் எளிதான EMI விருப்பங்களையும் பெறுவார்கள்.

Amazon Great Freedom Festival Sale 2025: ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும்

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் 2025 விற்பனை ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த விற்பனையை மற்றவர்களை விட 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே அணுக முடியும். ஆகையால் சலுகைகளை அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கும். 

இந்த விற்பனை எவ்வளவு காலம் நடைபெறும்? அதன் கடைசி தேதி என்ன? இந்த விவரங்கள் குறித்து எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவர் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெற விரும்பினால், அதன் மாதாந்திர விலை ரூ.299, காலாண்டுக்கு ரூ.599 மற்றும் ஆண்டு விலை ரூ.1,499 என்பதை நினைவில் கொள்ள வேண்டும். Amazon Prime Shopping Edition -இன் விலை ஒரு வருடத்திற்கு ரூ.399 ஆக உள்ளது.

SBI கிரெடிட் கார்டில் சலுகைகள் கிடைக்கும்

- SBI உடனான அமேசானின் கூட்டாண்மை காரணமாக, வாடிக்கையாளர் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், அவருக்கு EMI பரிவர்த்தனையில் 10% வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

- இது மட்டுமல்லாமல், கட்டணமில்லா EMI வசதியும் வழங்கப்படுகிறது. 

- இது தவிர, வாடிக்கையாளர்கள் பரிமாற்ற சலுகையையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

- இந்த விற்பனையில், இரவு 8 பிஎம் டீல்ஸ், டிரெண்ட்ங் டீல்ஸ் போன்ற சில லிமிடட் டைம் ஆஃபர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிக சேமிப்புடன் சிறந்த ஷாப்பிங்

- இந்த முறை பயனர்களுக்கு Amazon Pay-அடிப்படையிலான சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் போன்ற வசதிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- இது நிதிச் சுமையைக் குறைக்கும். 

- விரைவில் இந்த விற்பனையின் சலுகைகளின் விவரங்கள் வெளிவரும் என கூறப்படுகின்றது.

- அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் சாத்தியமான சலுகைகள் பற்றி அறியக்கூடும்.

- வாடிக்கையாளர்கள் மற்ற வலைத்தளங்களில் உள்ள பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

- இது சிறந்த சலுகையைத் தேர்வுசெய்யவும், ஷாப்பிங் செய்யும் போது அதிகமாகச் சேமிக்கவும் உதவும்.

மேலும் படிக்க | யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி? அரசே கொடுக்கும் இலவச பயிற்சி

மேலும் படிக்க | Lava Blaze Dragon 5G: ரூ.10,000 விட குறைவான விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்போன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News