61 வயது முதியவரின் உயிர் காத்த Apple Watch: மகிழ்ச்சியில் செய்தி அனுப்பிய Tim Cook!!

நாம் தினசரி உபயோகிக்கும் கேட்ஜெட்டுகள் நமக்கு பல முக்கிய பயன்களை அளிக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு

Written by - ZEE Bureau | Last Updated : Oct 21, 2020, 04:02 PM IST
  • ஆர். ராஜ்ஹன்ஸ், ஆப்பிள் வாட்ச்சின் உதவியுடன் தினமும் தன்னுடைய ECG-ஐ செக் செய்கிறார்
  • வரவிருக்கும் பெரிய ஆபத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கையை Apple Watch அளித்துள்ளது.
  • உங்கள் தந்தை சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற முடிந்தது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்-Tim Cook.
61 வயது முதியவரின் உயிர் காத்த Apple Watch: மகிழ்ச்சியில் செய்தி அனுப்பிய Tim Cook!!

புதுடெல்லி: கேட்ஜெட்டுகள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி வருகின்றன. ஆனால் இப்போது இவை நம் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உயிரைக் கூட காப்பாற்றுகின்றன. ஆம்!! சமீபத்தில், 61 வயதான ஒரு நபரை ஆப்பிள் வாட்ச் (Apple Watch) காப்பாற்றியுள்ள ஒரு சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது.

நடந்தது என்ன?

ஆர். ராஜ்ஹன்ஸ், ஓய்வுபெற்ற மருந்துத் துறை வல்லுநர். இவர் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஐப் (Apple Watch Series 5) பயன்படுத்துகிறார். இதன் உதவியுடன் தினமும் தன்னுடைய ECG-ஐயும் செக் செய்கிறார். அவருக்கு மார்ச் மாதத்தில் உடல்நலம் திடீரென மோசமடைந்ததால், இந்த வாட்சை அவர் தன்னுடன் வைத்திருக்க முடிவு செய்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (Harvard University) படித்துக்கொண்டிருக்கும் அவரது மகன் சித்தார்த் இந்த வாட்சை அவருக்கு பரிசாக வழங்கினார். சித்தார்த், 'ஆப்பிள் வாட்சில் நீங்கள் ECG செயல்பாட்டை செக் செய்யலாம். ஒரு நாள் என் தந்தையின் இதயத் துடிப்பு நள்ளிரவில், இரண்டு முதல் மூன்று முறை அசாதாரணமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது நிலை மிகவும் மோசமாகிவிட்டது.’ என்று கூறினார்.

பலமுறை சோதனைகளுக்குப் பிறகும், முடிவுகளில் எந்த மாற்றமும் தெரியாதபோது, ​​அது பற்றி அவர் தனது மருத்துவரிடம் கேட்டார். இருப்பினும், ராஜ்ஹன்ஸ் ஒருபோதும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதில்லை. அவருக்கு எந்த இதய நோயும் இல்லை. மேலதிக விசாரணையில், ராஜ்ஹன்சிற்கு குறைந்த எஜெக்ஷன் ஃப்ரிக்ஷன் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ALSO READ: WhatsApp Upadate: இனி வாட்ஸ்அப் Web-யிலும் ஆடியோ & வீடியோ கால் செயலாம்...!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இதை கூறினார்

COVID-19 காரணமாக விதிக்கபட்ட கட்டுப்பாடுகளால் அறுவை சிகிச்சை தாமதமானது. ஆனால் ராஜ்ஹன்ஸ் தன்னுடைய Apple Watch மூலம் தனது ECG-ஐ தொடர்ந்து கண்காணித்து வந்தார். அவரது தந்தையின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சித்தார்த், டிம் குக்கிற்கு (Tim Cook) இது குறித்து தகவல் கொடுத்தார். அதன் பிறகு Apple-ன் தலைமை நிர்வாக அதிகாரி ட்வீட் செய்து இதற்கு பதிலளித்தார். 'இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் தந்தை சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற முடிந்தது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன், அவர் முன்பை விட இப்போது நன்றாக இருக்கிறார் என்று நம்புகிறேன். எங்கள் குழு உங்களுடன் இணைந்திருக்கும்’ என Tim Cook எழுதினார்.

வரவிருக்கும் பெரிய ஆபத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கையை Apple Watch அளித்துள்ளது. அதனால் அந்த முதியவரால், சரியான நேரத்தில் சிகிச்சையும் எடுத்துக்கொள்ள முடிந்தது. நாம் தினசரி உபயோகிக்கும் கேட்ஜெட்டுகள் நமக்கு பல முக்கிய பயன்களை அளிக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

ALSO READ: Video தேடலை எளிதாக்க புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது Facebook!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News