ஒரே ஒரு ரீசார்ஜ்... 395 நாட்கள் டேட்டா, காலிங் டென்ஷன் இல்லை.. BSNL மாஸ் பிளான்

BSNL Recharge plan: நீங்கள் ஒரு BSNL பயனராக இருந்து, காலிங், டேட்டா மற்றும் SMS உட்பட அனைத்து வசதியும் நீங்கள் பெற வேண்டும் என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 23, 2025, 06:46 PM IST
  • இந்தத் திட்டம் 395 நாட்கள் செல்லுபடியாகும்
  • எந்த எண்ணுக்கும் வரம்பற்ற காலிங்
  • மக்களுக்கு ஏற்ற சிறந்த திட்டம்
ஒரே ஒரு ரீசார்ஜ்... 395 நாட்கள் டேட்டா, காலிங் டென்ஷன் இல்லை.. BSNL மாஸ் பிளான்

BSNL One Year Recharge Plan: சும்மா சும்மா ரீசார்ஜ் செய்வதை தவிர்க்கும் மக்கள் நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தையே அதிகம் விரும்புகிறார்கள், இதனால் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையில் இருந்து விடுப்படலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஒரு BSNL பயனராக இருந்து, காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற அனைத்து வசதியையும் ஒன்றாக பெறும் நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், இன்று நாம் BSNL நிறுவத்தின் அத்தகைய ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி தான் காணப் போகிறோம். இதில் நீங்கள் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள், அதுவும் மிகக் குறைந்த விலையில் மற்றும் அதிக நாட்களுக்கு. அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றிய முழுமையாக இங்கே தெரிந்துக்கொள்வோம்.

BSNL நிறுவத்திந ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு நன்மைகள் கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. ஆனால் நாம் பேசப் போகும் திட்டத்தின் விலை ரூபாய் 2399 ஆகும். நீண்ட செல்லுபடியை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டமாக இருக்கும். இந்தத் திட்டம் 395 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது நீங்கள் ஒரு வருடத்திற்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

எந்த எண்ணுக்கும் வரம்பற்ற காலிங்
இந்தத் திட்டத்திந சிறப்பு என்னவென்றால் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் வசதியைப் பெறுவீர்கள். அதாவது நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்காக இருந்தாலும் சரி அதில் அளவில்லாமல் பேசிக் கொண்டே இருக்கலாம். அழைப்பதோடு, தினமும் 100 SMS- வசதியையும் பெறுவீர்கள். இது உங்கள் தினசரி செய்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது.

மறுபுறம், டேட்டாவைப் பற்றிப் பேசுகையில், தினமும் 2GB அதிவேக டேட்டாவைப் பெறுவீர்கள். இருப்பினும், தினசரி டேட்டா 2GB முடிந்த பிறகும், வேகம் 40 kbps ஆகக் குறையும். ஆனால், நீங்கள் இணையத்தின் செயல்பாடு ஓடிக்கொண்டே இருக்கும். 

மக்களுக்கு ஏற்ற சிறந்த திட்டம்
ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட நேரம் கவலையின்றி இருக்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும், பயணம் செய்தாலும் அல்லது வழக்கமான பயன்பாட்டிற்கு நம்பகமான இணைய இணைப்பை விரும்பினாலும் சரி, இந்தத் திட்டம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

மேலும் படிக்க | கூகுள் குரோம் பயனர்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!

மேலும் படிக்க | தட்கல் முன்பதிவு புதிய விதிகள்: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News