JioCinema Premium Subscription: ஜியோசினிமா தனது புதிய சந்தா சேவையான 'ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு மாதத்திற்கு வெறும் ரூ.29 முதல் தொடங்கும் இரண்டு புதிய ஜியோசினிமா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோசினிமா பிரீமியம் திட்டம் என்பது ஜியோசினிமா தளத்தின்கீழ் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பிரீமியம் செலுத்தி பார்க்கும் ஒரு கட்டண சந்தா திட்டமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தின் சிறப்பம்சம்


இந்தத் திட்டங்களில் விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்களைப் பார்க்கும் வசதி, சிறந்த வீடியோ 4 கே ஸ்ட்ரீமிங் மற்றும் ஆஃப்லைனில் பார்க்கும் வசதியைப் பெறுவீர்கள். 


ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தில் சேர்ந்தால், ஸ்மார்ட் டிவிகள் உட்பட எந்த சாதனத்திலும் பிரத்யேக தொடர்கள், திரைப்படங்கள், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள் மற்றும் டிவி பொழுதுபோக்குகளை அனுபவிக்க முடியும்.


ஜியோசினிமா பிரீமியம் சந்தா மாதத்திற்கு ரூ.99 மற்றும் வருடத்திற்கு ரூ.999 என்ற விலையில் இருந்தது. தற்போது மூன்றில் இரண்டு பங்கு விலை குறைக்கப்பட்டு இப்போது மாதத்திற்கு ரூ.29 முதல் தொடங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க - தள்ளுபடியை அள்ளி வீசும் ஜியோ... 50 நாள்களுக்கு இலவசம் - அதுவும் ஐபிஎல் காலத்தில்!


புதிய ஜியோசினிமா திட்டங்களை எவை?


புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு புதிய ஜியோசினிமா திட்டங்களில் ரூ.29 விலை கொண்ட திட்டமானது ஒரே ஒரு டிவைஸ்க்கான ஆதரவை மட்டுமே வழங்கும். 


மற்றொரு புதிய ரூ.89 திட்டமானது நான்கு டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்கும். இந்த திட்டம் தான் ஜியோசினிமா குடும்ப பிளான் (JioCinema Family Plan) என்று அழைக்கப்படுகிறது.


அட்டகாசமான ஜியோசினிமா 'குடும்ப' திட்டம்


ஜியோசினிமா ஒரு 'குடும்ப' திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது மாதத்திற்கு ரூ.89 செலவாகும். இந்த திட்டத்தில், ஜியோசினிமா பிரீமியம் ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு திரைகளில் பயன்படுத்தப்படலாம். தற்போதுள்ள ஜியோசினிமா பிரீமியம் உறுப்பினர்கள் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஜியோ சினிமா பேமிலி பிளானின் (JioCinema Family Plan) கீழ் கிடைக்கும் கூடுதல் பலன்களை பெறலாம். 


மேலும் படிக்க - ஐபிஎல் போட்டிகளை பார்க்க இனி கட்டணம் வசூலா...? - ஜியோசினிமாவின் புதிய திட்டம்...!


பிரபலாமான வெப் தொடர்: ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் 


தற்போதைய இந்தியன் பிரீமியர் லீக்கை விளம்பரங்களுடன் இலவசமாக அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், ஜியோசினிமா பிரீமியம் உறுப்பினராகி, சில சிறப்புப் பலன்களைப் பெறுவீர்கள். இதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் போன்ற பல பிரபலமான தொடர்களையும், பீகாக், எச்பிஓ, பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி போன்ற முன்னணி ஸ்டுடியோக்களின் படங்களையும் ரசிக்கலாம். சிறப்பு என்னவென்றால், இந்த உள்ளடக்கம் அனைத்தும் நீங்கள் விரும்பும் இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு கிடைக்கும்.


குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்திற்கான திட்டம்


இந்த திட்டம் மூலம் குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்திற்கான பொழுதுபோக்கிற்கான அனைத்து வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. மோட்டு-பட்லு மற்றும் ஷிவா முதல் போகிமான் மற்றும் பெப்பா பிக் வரை பல்வேறு வகையான கார்ட்டூன்கள் மற்றும் திரைப்படங்கள் ஜியோசினிமாவில் கிடைக்கும். மேலும், பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்களின் உதவியுடன், நீங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம். 


ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய தொடர் 


புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கும் ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) மிகவும் நல்லது. ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய தொடர் வெளியிடப்படும்.


மேலும் படிக்க - ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் ஐடியா யூசர்கள் ஐபிஎல் பார்ப்பது எப்படி? இதோ சூப்பர் பிளான்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ