BSNL Cheap Recharge Plans With Long Validity: பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது லாபத்தை குவித்து வருகிறது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான இது தனியார் நிறுவனங்களில் ஆதிக்கத்தால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து பின்னடைவில் இருந்து வந்தது.
BSNL Recharge Plans: மலிவு விலையில் நிறைவான சேவை
கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்ததன் விளைவாக அடுத்தடுத்த மாதங்களில் பிஎஸ்என்எல் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது ஆரம்பித்தது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நல்ல நேரம். தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
இதனால், பிற நிறுவனங்களிடம் இருந்து வரும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் பல புதிய திட்டங்களை மலிவான விலையில் அறிவித்தன. அந்த திட்டங்களின் பலன்களை தனியார் நிறுவனங்கள் சற்று அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றன. எனவேதான், தற்போது பலரும் பிஎஸ்என்ல் நிறுவனத்தின் பக்கம் திரும்பி உள்ளனர்.
BSNL Recharge Plans: நீண்ட வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி இணைய சேவையை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போதுதான் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கி உள்ளது. இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை சேவை பலரையும் ஈர்க்கிறது எனலாம். அந்த வகையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட அற்புதமான திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலையும் மற்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் விலையுடன் ஒப்பிட்டால் மலிவானதாகவே இருக்கிறது எனலாம்.
70 நாள்கள், 90 நாள்கள், 150 நாள்கள், 160 நாள்கள், 336 நாள்கள், 365 நாள்கள், 425 நாள்கள் என அதிக வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் பிளான்கள் பிஎஸ்என்எல் வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய பிளான் ஒன்றை 180 நாள்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில், இந்த திட்டத்தின் விவரங்களை இங்கு காணலாம்.
BSNL Recharge Plans: 180 நாள்கள் ரீசார்ஜ் திட்டத்தின் பயன்கள்
180 நாள்கள் அதாவது 6 மாதத்திற்கு சேவை அளிக்கும் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.897 ஆகும். இந்த திட்டத்தில் காலிங் வசதி, டேட்டா பலன்கள், எஸ்எம்எஸ் போன்ற சேவைகள் கிடைக்கின்றன. ரூ.897 விலையில் 180 நாள்களுக்கு வழங்கப்படும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு மொத்தம் 90 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா நிறைவடைந்துவிட்டால் இணைய வேகம் 40Kbps அளவிற்கு குறையும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். லோக்கல் மற்றும் எஸ்டிடீ கால்கள், எந்த நெட்வோர்க்கிற்கு வேண்டுமானாலும் வரம்பற்ற வகையில் பேசிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | மார்ச் மாதம் அறிமுகம் ஆகவுள்ள அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்: முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ