Jio VS BSNL: ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் பல ரீசார்ஜ் திட்டங்களை தற்போது கொண்டு வந்துள்ளன, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வெவ்வேறு வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் அழைப்பு வசதியைப் போன்ற பல வசதிகளை பெறுவார்கள்.
ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் இரண்டு நிறுவனமும் ரூ.100 வரையிலான திட்டங்களை வைத்துள்ளது. இதில் எந்தத் திட்டத்தில் நீங்கள் என்ன நன்மைகளைப் பெறுகிறீர்கள் என்று பார்ப்போம்.
ஜியோவின் ரூபாய் 100 ரீசார்ஜ் திட்டத்தில் என்ன நமைகள் கிடைக்கும்?
இந்த ஜியோ திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி டேட்டா வழங்கப்படும். இது தவிர, பயனர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவையும் ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் 100 ரூபாய் விலையில் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. இது அணைத்து IPL போட்டிகளையும் காண ரசிகர்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி, ஜியோ OTT தளம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளடக்கங்களை காண அனுமதிக்கிறது. ஜியோ ரூ. 100 திட்டம் (Jio Rs 100 Plan) அதன் பயனருக்கு 5GB டேட்டா நன்மையை வழங்குகிறது.
BSNL-ன் ரூ.200-ல் என்ன நன்மைகள் கிடைக்கும்?
பிஎஸ்என்எல்லின் ரூ.107 ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் 200 நிமிடங்கள் இலவச உள்ளூர், எஸ்டிடி அல்லது ரோமிங் அழைப்புகளை பெறுவார்கள். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 35 நாட்கள் ஆகும்.
எந்த திட்டம் பெஸ்ட் - BSNL அல்லது Jio?
BSNL திட்டத்தில் OTT சந்தா கிடைக்கவில்லை. அதே நேரத்தில், ஜியோவின் திட்டம் 90 நாட்கள் OTT சந்தாவை வழங்குகிறது. இது தவிர, 5 ஜிபி டேட்டாவுடன் கூடிய திட்டத்தின் விலையும் ரூ.100 மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில், ஜியோவின் திட்டம் பயனர்களுக்கு சிக்கனமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ. 99 திட்டம்:
இந்த பிஎஸ்என்எல் 99 பிளான் மலிவு விலை விருப்பமாகும். வெறும் 100 ரூபாய்க்குள் பிஎஸ்என்எல் சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்த செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 17 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை போன்ற வேறெந்த நன்மைகளும் கிடைக்காது.
மேலும் படிக்க | BSNL 5G சேவை மிக விரைவில்... பலன்களை பெறும் சில நகரங்கள் இவை தான்...
மேலும் படிக்க | BSNL மெகா சூப்பர் திட்டம்: 600 ஜிபி.. 365 நாட்கள் வேலிடிட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









