BSNL பெறும் ரூ.61,000 கோடி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு... மிக விரைவில் 5ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை இந்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2025, 11:39 AM IST
  • நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தெரிவித்த தகவல்.
  • பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கை.
  • மத்திய அரசிடமிருந்து BSNL நிறுவனத்திற்கு கிடைத்துள்ள நிதி உதவி
BSNL பெறும் ரூ.61,000 கோடி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு... மிக விரைவில் 5ஜி சேவை

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை இந்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.

Add Zee News as a Preferred Source

பிரீமியம் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான அணுகல்

மத்திய அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம், BSNL நிறுவனம், 5G சேவைகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் 700 MHz மற்றும் 3300 MHz (Mid-Band) போன்ற பிரீமியம் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான அணுகலைப் பெற்றுள்ளது. BSNL 5G சேவைகளின் அறிமுகம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். இது நிறுவனத்தின் சந்தைப் பங்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடவும் உதவும். 

நாடு முழுவதும் ஒரு லட்சம் 4G டவர்களை நிறுவ திட்டம்

BSNL நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு லட்சம் 4G டவர்களை ஆர்டர் செய்துள்ளது. பின்னர் அவை 5G க்கு மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மார்ச் 8 வரை, BSNL 83,993 4G டவர்களை நிறுவியுள்ளது. இவற்றில் 74,521 தளங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. BSNL நிறுவனம் முதலில் 5G சேவைகளை டெல்லியில் தொடங்கும் என்றும் அதன் பிறகு இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தெரிவித்த தகவல்

பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க் பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் 5G சேவைகளை முறையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ள நிலையில், பிஎஸ்என்எல் 700 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 5ஜி அலைக்கற்றையை முன்பதிவு செய்துள்ளதாக தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

மத்திய அரசிடமிருந்து BSNL நிறுவனத்திற்கு கிடைத்துள்ள நிதி உதவி

BSNL நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் 5G வெளியீட்டிற்கு போதுமான நிதியை ஒதுக்க மத்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. பிப்ரவரி 2025 இல் 4G விரிவாக்கத்திற்கு ரூ. 6,000 கோடி கூடுதல் தொகை ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2019 முதல் தற்போது வரை, BSNL மற்றும் MTNL இன் மறுமலர்ச்சிக்காக அரசாங்கம் 3.22 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 

BSNL நிலை மற்றும் 5G வெளியீட்டின் தாக்கம்

BSNL தற்போது டெல்லி மற்றும் மும்பையில் MTNL நிறுவனமாக செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. ஆனால், 4ஜி சேவையில் தாமதம் ஏற்பட்டதால் அந்நிறுவனம் பெரும் வாடிக்கையாளர் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், 5G சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் BSNL ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | BSNL 5G சேவை மிக விரைவில்... பலன்களை பெறும் சில நகரங்கள் இவை தான்...

மேலும் படிக்க | BSNL மெகா சூப்பர் திட்டம்: 600 ஜிபி.. 365 நாட்கள் வேலிடிட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News