WhatsApp-இல் இனி ChatGPT மூலம் AI படங்களை உருவாக்கலாம்: எளிய செயல்முறை இதோ

ChatGPT Image Generator in WhatsApp: ChatGPT பல தளங்களில் விரிவடைந்து வரும் இந்த நிலையில், ​​WhatsApp ஒருங்கிணைப்பு மேம்பட்ட AI கருவிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2025, 12:48 PM IST
  • WhatsApp -இல் ChatGPT -ஐ எவ்வாறு பயன்படுத்துவது?
  • 3 எளிய செயல்முறைகளின் மூலம் செய்யலாம்.
  • WhatsApp -இல் ChatGPT -ஐப் பயன்படுத்தத் தொடங்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
WhatsApp-இல் இனி ChatGPT மூலம் AI படங்களை உருவாக்கலாம்: எளிய செயல்முறை இதோ

ChatGPT Image Generator in WhatsApp: OpenAI அதன் AI பட உருவாக்க திறன்களை WhatsApp-க்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளத்தில் கோடிக்கணக்கான பயனர்களுக்கு விரல் நுனியில் ChatGPT-யின் அணுகல் கிடைத்துள்ளது. முன்னர் ChatGPT மொபைல் மற்றும் வலை செயலிகள் மூலம் மட்டுமே இதை அணுக முடியும். ஆனால் இப்போது குறிப்பிட்ட பகுதிகளில் இந்த அம்சம் WhatsApp பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

நிறுவனம், X இல் ஒரு சமூக ஊடகப் பதிவில், “ChatGPT image generation இப்போது 1-800-ChatGPT வழியாக WhatsApp இல் கிடைக்கிறது. இனி இது அனைவருக்கும் கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளது.

இந்த இலவச டூல் பயனர்கள் தங்கள் WhatsApp சேட்டில் நேரடியாக AI படங்களை உருவாக்க அல்லது திருத்த உதவுகிறது. இது ஒரு புதிய அளவிலான வசதி மற்றும் படைப்பாற்றல் மிக்க அம்சத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.

How to use ChatGPT on WhatsApp

 WhatsApp -இல் ChatGPT -ஐ எவ்வாறு பயன்படுத்துவது? இதை 3 எளிய செயல்முறைகளின் மூலம் செய்யலாம். WhatsApp -இல் ChatGPT -ஐப் பயன்படுத்தத் தொடங்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

1. அதிகாரப்பூர்வ எண்ணைச் சேமிக்கவும்: +1 (800) 242-8478 என்ற எண்ணை உங்கள் தொலைபேசியின் 'காண்டாக்ட்' -இல் சேவ் செய்யவும்.

2. உரையாடலைத் தொடங்கவும்: WhatsApp -ஐத் திறந்து "Hi" என டைப் செய்து இந்த எண்ணுடன் சேட்டைத் தொடங்கவும்.

3. உங்கள் கணக்கை இணைக்கவும்: பாதுகாப்பான உள்நுழைவுப் பக்கத்தின் மூலம் உங்கள் OpenAI கணக்கை இணைக்க அறிவுறுத்தலைப் பின்பற்றவும். OpenAI கணக்கு இணைக்கப்பட்டதும், உங்களுக்கு தேவையான ப்ராம்ப்டுகளை டைப் செய்து இமேஜ் ஜெனரேஷனைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

Image creation: இதன் வரம்புகள் மற்றும் செயல்திறன் என்ன?

தற்போது, ​​இலவசமாக இதை பயன்படுத்தும் பயனர்கள் ஒரு நாளைக்கு ஒரு படத்தை உருவாக்க முடியும்.அதன் கூல்டவுன் காலம் தோராயமாக 24 மணிநேரம் ஆகும். சோதனைகளின் போது, இமேஜ் உருவாக்க செயல்முறைக்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது. இது ஒரு மென்மையான மற்றும் தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகிறது.

இருப்பினும், சில பயனர்கள் தங்கள் OpenAI கணக்கை WhatsApp உடன் இணைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். OpenAI தற்போது ஒருங்கிணைப்பைச் செம்மைப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. ஆகையால், மிக விரைவில் ஒரு மேம்படுத்தப்பட்ட நிலையான வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

ChatGPT on WhatsApp: இமேஜ்களை தாண்டி இன்னும் பல அம்சங்கள்

இமேஜ்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், WhatsApp இல் ChatGPT பயனர்களுக்கு மின்னஞ்சல்களை எழுதுதல், சமையல் குறிப்புகளை உருவாக்குதல், எழுதிய பிரதிகளை சரிபார்த்தல் மற்றும் பட பதிவேற்றங்கள் மூலம் புகைப்படங்களை விளக்குதல் போன்ற பல்வேறு அன்றாட பணிகளுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meta AI Assistant 

Meta ஏற்கனவே WhatsApp இல் அதன் சொந்த Meta AI அசிஸ்டண்டை இதே போன்ற திறன்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ChatGPT அதன் நன்கு அறியப்பட்ட உரையாடல் சக்தி மற்றும் இமேஜ் உருவாக்கும் திறமையையும் இந்த தளத்திற்குக் கொண்டுவருகிறது.

ChatGPT பல தளங்களில் விரிவடைந்து வரும் இந்த நிலையில், ​​WhatsApp ஒருங்கிணைப்பு மேம்பட்ட AI கருவிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. விஷுவல் படைப்பாற்றல் முதல் உற்பத்தித்திறன்களுக்கான தேடல்கள் வரை, அனைத்திலும் உதவ திறன் படைத்த AI உதவியாளராக, இனி ChatGPT பயனர்களின் WhatsApp -இலேயே கிடைக்கும்.

மேலும் படிக்க | வெறும் ரூ.198 திட்டம், 40 நாட்களுக்கு அன்லிமிடெட் வசதிகளை பெறலாம்

மேலும் படிக்க | ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News