டிஜிட்டல் யுகத்தில் சைபர் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாடுபட்டு சம்பாதித்த பணத்தை மோசடி கும்பலிடம் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் காண்கிறோம். பயம் அல்லது அச்சம் என்பது யாரையும் எளிதில் சிக்க வைக்கும் ஒரு விஷயம். மோசடி செய்பவர்கள் மக்களின் மனதில் அச்சத்தைப் பயன்படுத்தி மிக எளிதாக மக்களை சிக்க வைத்து அவர்களின் வங்கிக் கணக்குகளை காலி செய்து விடுகிறார்கள்.
சமீபத்தில், மோசடி நபர் ஒருவர், போலீஸ் அதிகாரி போல் தன்னை காட்டி கொண்டு, பஞ்ச்குலாவில் வசிக்கும் 83 வயது ஓய்வு பெற்ற நபரை ஏமாற்றினார். பணமோசடி வழக்கில் சம்பந்தம் இருப்பதாக முதியவர் மிரட்டப்பட்டார். மோசடி செய்பவர் தன்னை ஹைதராபாத் குற்றப்பிரிவு தலைமையகத்தின் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த மோசடி நபர் பாதிக்கப்பட்டவரை உடனடியாக ஹைதராபாத் வரும்படி கூறினார்.
இருப்பினும், வயதான நபர் தனது வயதின் காரணமாக பயணம் செய்ய இயலாமையை வெளிப்படுத்தியபோது, அவரை அழைத்த மோசடி செய்பவர் ஆன்லைனில் விசாரணை நடத்துவதாக மிரட்டினார். மேலும் அவர் ஒத்துழைக்கவில்லை என்றால் விஷயம் பகிரங்கப்படுத்தப்படும் என்று எச்சரித்தார். முதியவர்களை பயமுறுத்துவதற்காக, மோசடி செய்பவர் வேறொரு எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பை (Crime News) மேற்கொண்டார் மற்றும் வீடியோ அழைப்பின் மூலம் அவரை டிஜிட்டல் காவலில் வைத்திருந்தார்.
மோசடி நபர் அழைப்பு குறித்த தகவலை மனைவி உட்பட யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், இல்லையெனில் பிரச்சனையில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதை யாரிடமும் தெரிவிக்காதது தான் முதியவரின் தவறு. விஷயத்தை மூடிமறைக்க பணம் கொடுக்குமாறும், மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார். இந்த விஷயத்தை மூடிமறைக்க, பாதிக்கப்பட்டவர் வெவ்வேறு கணக்குகளுக்கு பணத்தை மாற்றும்படி கேட்கப்பட்டார்.
முதல் நாள், முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30.90 லட்சத்தை மோசடி செய்பவர்கள் பரிந்துரைத்த கணக்கிற்கும், மறுநாள் ரூ.18.50 லட்சம் மற்றும் ரூ.8.50 லட்சத்தை இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மோசடி செய்தவர் மாற்றினார். மொத்தம், இரண்டே நாட்களில், டிஜிட்டல் கைதியாக வைத்து, முதியவரை, 57.90 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.
மோசடி விவகாரம் பல நாட்களாக தொடர்ந்ததால், மோசடி செய்பவர்கள் பணம் கேட்டு வந்தனர். பாதிக்கப்பட்டவர் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் இது குறித்து ஆலோசனை கேட்டபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனடியாக சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்தார். போலீசார் 316 (2), 318 (4) மற்றும் 319 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வாட்ஸ்அப்பில் ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்து, உங்களை ஏதாவது வழக்கில் சிக்க வைக்கச் சொன்னால், உங்களைக் ஏமாற்ற சதி நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடனடியாக அழைப்பைத் துண்டித்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொல், ஓடிபி போன்றவற்றை தெரியாத நபரிடம் கொடுத்து தவறு செய்யாதீர்கள்.
உங்களுக்கு இது போன்ற சம்பவம் நடந்தால், எந்த எண்ணுக்கு உடனடியாக அழைக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930க்கு அழைத்து உங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து வழக்கு பதிவு செய்யுங்கள்.
மேலும் படிக்க - வோடஃபோன் சிம் யூஸ் பண்றீங்களா? அப்போ இதோ சூப்பரான 5ஜி சர்வீஸ்
மேலும் படிக்க - அதிரடி ஆட்டத்தை தொடங்கிய BSNL.. Jio, Airtel அலறல்.. அள்ளி தரும் மாஸ் திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









