அள்ளி தரும் பிளிப்கார்ட்.. குறைந்த விலையில் Samsung Galaxy F16 5G போன்

Samsung Galaxy F16 5G Price Cut: கம்மி பட்ஜெட்டில் மாஸ் 5G போனை வாங்க விரும்பினால், இதோ Samsung Galaxy F16 5G போன் வாங்க பிரத்தியேக வாய்ப்பு. பம்பர் தள்ளுபடி விலையில் எப்படி வாங்கலாம் என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 24, 2025, 07:10 PM IST
  • Samsung Galaxy F16 5G: தள்ளுபடி.
  • வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு விவரம்.
அள்ளி தரும் பிளிப்கார்ட்.. குறைந்த விலையில் Samsung Galaxy F16 5G போன்

Samsung Galaxy F16 5G Discount: ஸ்மார்ட்போனில் சாம்சங் உங்களுக்கு மிகவும் பிடித்த பிராண்டா அப்படியானால் இதோ வெளியாகியுள்ளது ஒரு நல்ல செய்தி. தற்போது, ​​சாம்சங் ஸ்மார்ட்போனான Samsung Galaxy F16 5G இல் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸம்ராட்போனை நீங்கள்  மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் பல சிறந்த அம்சங்கள் உள்ளன. இதனால் தற்போது பட்ஜெட் விலை இந்த ஸ்மார்ட்போனை வாங்க இதுவே சரியே நேரம். இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் குறைவான  விலையில் உங்களுக்கு நல்ல 5G போன் தேர்வாகும் இதுவாக இருக்கலாம். இப்போது இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் பிற அம்சங்களைப் பற்றி விரிவாகக் தெரிந்துக்கொள்வோம்.

Samsung Galaxy F16 5G: தள்ளுபடி
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜூடன் கூடிய Bling Black நிறத்தில் அமேசானில் Samsung Galaxy F16 5G போனை நீங்கள் ரூ.18,999 விலைக்கு வாங்கலாம். ஆனால், எவ்வித வங்கி தள்ளுபடியின்றி இந்த போன் 18% தள்ளுபடியுடன் வாங்கலாம். இதன் மூலம் Samsung Galaxy F16 5G போனை ரூ.15,499க்கு வாங்கலாம். அதாவது ஒரிஜினல் விலையை விட ரூ.3,500 குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இத்துடன் தள்ளுபடிகள் முடிவதில்லை. கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையில் மேலும் போனின் விலை குறையும்.

மேலும் படிக்க | 6G Technology: உலகை மாற்றும் ஆற்றல் கொண்ட 6G... பந்தயத்தில் முந்தும் நாடுகள் எவை?

வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு விவரம்:
Samsung Galaxy F16 5G போனை பிளிப்கார்ட்டில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் கூடுதலாக 5% கேஷ்பேக் பெறலாம். மேலும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும். எஸ்பிஐ டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும்.

இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ரூ.9,500 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகையானது தொலைபேசியின் மதிப்பு அதன் மாதிரி மற்றும் நிலையைப் பொறுத்தது. இதற்கு நீங்கள் போனின் விவரங்களை உள்ளிட்டு மதிப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்.

Samsung Galaxy F16 5G: விவரக்குறிப்புகள்
Samsung Galaxy F16 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 800 nits பீக் பிரைட்னஸூடன் வருகிறது. இந்த போனில் 8GB வரையிலான ரேம் மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 SoC ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. கேமரா பற்றி பேசுகையில், இதில் மூன்று பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 50MP பிரதான கேமரா, 5MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 13 எம்பி முன்பக்க கேமரா தரப்பட்டுள்ளது. மேலும் இதில் 5,000 mAh பேட்டரி, 25W வயர்டு சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | BSNL-ன் அட்டகாசமான திட்டம்... 84 நாள்களுக்கு இத்தனை வசதிகளா...? விலையும் கம்மி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News