2025 ஆம் ஆண்டில் விண்டோஸ் 10 இயக்க முறைமையை நிறுத்தப் போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்படி என்றால், மில்லியன் கணக்கான கணினிகளில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த இயக்க முறைமை என்னவாகும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட விண்டோஸ் லைஃப் சைக்கிள் ஃபேஸ் ஷீட் (Windows 10 is a major release of the Windows NT operating system developed by Microsoft) இதை தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 ஹோம் (Home), புரோ (Pro), புரோ ஃபார் வொர்க்ஸ்டேஷன் (Pro for Workstations), புரோ எஜுகேஷன் (Pro Education) இயக்க முறைமை, 2025ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  


இதன் பொருள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அந்த குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வெளியிடாது.


மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ அறிமுகப்படுத்தியபோது, இது விண்டோஸின் கடைசி பதிப்பாக இருக்கும் என்று கூறியது. ஆனால், நிறுவனத்தின் சமீபத்திய டீஸர் இந்த மாத இறுதிக்குள் விண்டோஸ் 11 ஐ அறிமுகம் செய்யும் என்பதை உறுதிப்படுத்தியது. தனது இணையதளத்தில் ஒரு புதிய நிகழ்வை பட்டியலிட்டுள்ள மைக்ரோசாஃப்ட், ஜூன் 24 அன்று ஒரு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. அந்த நிகழ்வில், 'நெக்ஸ்ட் ஃபார் விண்டோஸ்' ('Next for Windows') என்ற பெயரின் எதிர்வரவிருக்கும் அனைத்தையும் முன்னிலைப்படுத்தும்.


Also Read | Google Updates: கூகுள் ஏன் தேடல் வழிமுறைகளைப் புதுப்பிக்கிறது?  


இந்த நிகழ்வு ஜூன் 24ஆம் தேதியன்று IST 8:30 மணிக்கு நடைபெறும் என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் நிறுவனம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் பில்ட் 2021 (Microsoft Build 2021) என்ற நிகழ்வின்போது பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அடுத்த தலைமுறை விண்டோஸ் புதுப்பிப்பு கடந்த தசாப்தத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்தார்.  


“டெவலப்பர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அதிக பொருளாதார வாய்ப்பைத் திறக்க கடந்த தசாப்தத்தின் மிக முக்கியமான விண்டோஸ் புதுப்பிப்புகளில் ஒன்றை விரைவில் பகிர்ந்து கொள்வோம். கடந்த பல மாதங்களாக இதை நானே நேரடியாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். விண்டோஸின் அடுத்த தலைமுறை குறித்து நான் மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.


விண்டோஸ் 10 2025 ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றாலும், மக்கள் விண்டோஸ் 7 இலிருந்து தங்கள் கணினியை மேம்படுத்த நீண்ட காலம் எடுக்கும். புதிய இயக்க முறைமைக்கு மாறுவதற்காக மைக்ரோசாப்ட் மக்களுக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்கும்.


Also Read | Smartphones: ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான போன்கள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR