)
Elon Musk Vs Microsoft Ceo: அமெரிக்க தொழில்துறை மாபெரும் நிறுவனங்களான Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், ஆகஸ்ட் 7 அன்று, Microsoft CEO சத்யா நாதெல்லாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். OpenAI நிறுவனத்தின் புதிய GPT-5 AI மாடல் வெளியானதை தொடர்ந்து, “OpenAI, Microsoft-ஐ விழுங்கப்போகுது” என அவர் தெரிவித்துள்ளார்.
Microsoft-இன் பெருமித அறிவிப்பு:
GPT-5 மாடல் தற்போது Microsoft 365 Copilot, GitHub Copilot, மற்றும் Azure AI Foundry போன்ற பல்வேறு சேவைகளில் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும், Microsoft தலைவர் நாதெல்லா கூறுகையில்: “இதுதான் இதுவரை வந்த OpenAI-யின் மிகவும் திறமையான மாடல். இது மிகச் சிறந்த ‘ரீஸனிங்’, ‘கோடிங்’, ‘சாட்’ திறன்களுடன் வருகிறது.”
எலான் மஸ்க் Vs நடேல்லா: நேரடி மோதல்!
OpenAI-யின் புதிய மாடல் GPT-5, இதுவரை வந்த AI மாடல்களில் சிறந்ததென Microsoft CEO சத்யா நடேல்லா பெருமையாக அறிவித்துள்ளார். “Azure-ல் train செய்யப்பட்ட GPT-5, reasoning, coding மற்றும் conversation-ல் next-level திறமை காட்டும்,” என அவர் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு பதிலடியாக எலான் மஸ்க், தனது X பக்கத்தில், “OpenAI, Microsoft-ஐ விழுங்கப்போகுது!” என விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தினார். இதற்கும் பதிலளித்த நடேல்லா, “அதைப் பார்ப்பதற்கே பல வருடங்களாக முயற்சிக்கிறார்கள். அதுவே தொழில்நுட்ப வளர்ச்சியின் உண்மை சுவை!” என பதற்றமின்றி அசால்ட்டாக பதிலடி கொடுத்தார். மேலும், மஸ்க் தொடர்ந்து, “Grok 4 Heavy, இரண்டு வாரங்களுக்கு முன்பே GPT-5-ஐ விட மேம்பட்டது. இப்போது அது இன்னும் மேம்பட்டுள்ளது. இதை மனதில் கொள்ளுங்கள்,” என தெரிவித்துள்ளார். இவரது xAI நிறுவனம், இந்த ஆண்டிற்குள் “Grok 5” என்ற அடுத்த தலைமுறை AI மாடலை வெளியிட உள்ளதாகவும், அது “நொறுக்கும்விதமாக சக்திவாய்ந்ததாக இருக்கும்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
OpenAI – GPT-5: என்ன சிறப்பு?
GPT-5 மாடல் தற்போது ChatGPT இலவச பயனாளர்களுக்கும் கிடைக்கிறது. இது OpenAI வெளியிட்ட மிகவும் திறமையான மற்றும் பாதுகாப்பான AI மாடல் என்று விளங்குகிறது. மேலும், GPT-4 மாடலிலும் முக்கியமான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக ரீஸனிங் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் சிறந்தது.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ