FBI Issues Warning: எப்பிஐ பெயரில் மோசடிகள் நடப்பதாக எச்சரித்துள்ள அந்த அமைப்பு, அதில் எப்படி சிக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் விளக்கமளித்துள்ளது.

FBI Issues Warning: அமெரிக்காவின் Federal Bureau of Investigation (FBI) சமீபத்தில் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மோசடியாளர்கள் FBI, போலீஸ் அல்லது அரசு ஏஜென்சிகளின் போலி அழைப்புகளை மூலம் பொது மக்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகள் எவ்வாறு நடைபெறுகின்றன, எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
மோசடியின் முறைகள்
போலி அழைப்புகள்: மோசடியாளர்கள் FBI/போலீஸ் ஏஜென்ட் போல தொலைபேசி அழைப்பு செய்து, "உங்கள் மீது குற்றவியல் வழக்கு உள்ளது" என்று மிரட்டுவார்கள். "பணம் செலுத்தாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள்" என்று பயமுறுத்துவார்கள்.
தனிப்பட்ட தகவல்களை கேட்பது: உங்கள் சோஷியல் சிக்யூரிட்டி நம்பர் (SSN), வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு போன்றவற்றை கேட்பார்கள்.
பணம் கேட்பது: கிரிப்டோகரன்சி, வயர் டிரான்ஸ்பர், ப்ரீபெய்ட் கார்டு மூலம் பணம் கேட்பார்கள்.
எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்வது?
* FBI/போலீஸ் ஒருபோதும் தொலைபேசியில் பணம் கேட்காது.
* அச்சுறுத்தும் அழைப்புகளை உடனே ரத்து செய்யவும்.
* தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்.
* சந்தேகம் வந்தால், உடன் FBI-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.ic3.gov புகார் செய்யவும்.
இந்த வகையான மோசடிகள் இந்தியாவிலும் CBI, இன்காம் டேக்ஸ் போன்றவற்றின் பெயரில் நடைபெறுகின்றன. எனவே, யாரும் தொலைபேசியில் பணம் அல்லது தகவல்களை கேட்டால் உடனே நிறுத்தவும்.
மோசடியாளர்களை (Scammers) எப்படி அடையாளம் காண்பது?
மோசடியாளர்கள் (ஸ்கேமர்கள்) தொலைபேசி, மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் மெசேஜிங் ஆப்ஸ் மூலம் தகவல்களைத் திருடவோ அல்லது பணத்தை ஏமாற்றவோ முயற்சிக்கிறார்கள். அவர்களை எளிதாக அடையாளம் காண சில முக்கிய அறிகுறிகள் இங்கு தரப்பட்டுள்ளன:
1. தொலைபேசி மோசடி அடையாளம் காணும் வழிகள்
அச்சுறுத்தல் / அவசரப்படுத்துதல்: "இப்போது பணம் செலுத்தாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள்!", "இது கடைசி வாய்ப்பு, உடனே செயல்படுங்கள்!"
அதிகாரப்பூர்வமான நிறுவனங்களைப் போல நடித்தல்: FBI, போலீஸ், வங்கி, இன்கம் டாக்ஸ் துறை போன்றவற்றின் பெயரில் அழைப்பு வரும்.
தனிப்பட்ட தகவல்களைக் கேட்பது: கிரெடிட் கார்டு எண், ATM பின் எண், Aadhaar/பான் எண் போன்றவற்றைக் கேட்பார்கள்.
பணம் கேட்பது: கிரிப்டோ (Bitcoin), Google Play கார்டு, வயர் டிரான்ஸ்பர் (Paytm/PhonePe) மூலம் பணம் கேட்பார்கள்.
மோசடியாளர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? - எந்த தகவலையும் கொடுக்காதீர்கள். அழைப்பை உடனே நிறுத்தி, தொடர்பு எண்ணைத் தொகுத்து புகார் செய்யவும்.
ஆன்லைன் / மின்னஞ்சல் மோசடி (Phishing) அடையாளம் காணுதல்
இலவச ஆஃபர்கள் / பரிசுகள்: "உங்கள் பேங்க் அக்கவுண்டில் ₹50,000 கிரெடிட் செய்யப்பட்டது!", "நீங்கள் லாட்டரி வென்றுள்ளீர்கள், கிளிக் செய்யவும்!" என போட்டிருப்பார்கள். மெயில் ஐடியை செக் செய்யவும்.
இதற்கான தீர்வு:
இலவச ஆஃபர்களை நம்ப வேண்டாம். URL ஐ சரிபார்க்கவும் (https:// உள்ளதா?). நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செக் செய்யவும். WhatsApp-ல் அறியப்படாத எண்களில் இருந்து வந்த ஆஃபர்களை நம்ப வேண்டாம்.
மோசடியில் சிக்காமல் இருக்க எளிய வழிகள்:
- யாருக்கும் OTP / பாஸ்வேர்ட் சொல்லாதீர்கள்.
- அந்நியருக்கு பணம் அனுப்ப வேண்டாம்.
- அதிகாரப்பூர்வ தொடர்பு எண்ணைத் தேடி சரிபார்க்கவும்.
- Cyber Crime க்கு புகார் செய்ய:
- https://cybercrime.gov.in, அல்லது 1930 -க்கு புகார் தெரிவிக்க அழைக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ