Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 4199-க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

ஸ்மார்ட் டிவி-ஐ வாங்குவதில் நீங்கள் முழுமையாக அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், இந்த புதிய ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ.4,199-க்கு வாங்க முடியும்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 1, 2021, 12:58 PM IST
Flipkart அதிரடி சலுகை: வெறும் ரூ. 4199-க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

Flipkart TV Days: பிளிப்கார்டில் டிவி டேஸ் சேல் (Flipkart TV Days Sale) தொடங்கிவிட்டது. இந்த சேல் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை இருக்கும். இந்த சேல்லில் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவாக கிடைக்கிறது. இந்த விற்பனையில், Mi, OnePlus, Realme மற்றும் Samsung ஆகியவற்றின் ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.

நீங்களும் பழைய டிவியை மாற்றிவிட்டு புதிய ஸ்மார்ட் டிவியை (Smart TV) வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு மிக சரியான வாய்ப்பாக இருக்கும். ஆண்டின் இறுதியில், ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சேலில் Mi இன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்கலாம். வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி-ஐ வாங்க முடியும். இவ்வளவு குறைந்த விலையில் எப்படி இந்த ஸ்மார்ட் டிவி-ஐ வாங்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Mi 4A Pro 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

Mi 4A Pro 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அறிமுக விலை ரூ.19,999 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில், இந்த டிவியில் 20% தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது ரூ.15,999-க்கு இந்த டிவி-ஐ வாங்க முடியும். ஆனால் வங்கி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த டிவியை இன்னும் மலிவாக வாங்கலாம். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

ALSO READ:Flipkart Offer: வெறும் ரூ. 5000-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Samsung Smart TV 

Mi 4A Pro 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் வங்கி சலுகைகள்

இந்த சேலில், ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிவி-ஐ வாங்கினால், ரூ.800 தள்ளுபடி கிடைக்கும். அதாவது ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.15,199 ஆக குறையும். இதற்குப் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த சேலில் அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி டிவி-ஐ வாங்கினால், அதன் விலை மேலும் குறையும்.

Mi 4A Pro 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

Mi 4A Pro 32 Inch HD Ready Smart Android TV-யில் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், அப்படி மாற்றிக்கொள்ள உங்கள் பழைய டிவியின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருக்க வேண்டும். இந்த சலுகையை பயன்படுத்தினால், 11 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த சேலில் (Flipkart Sale) ஸ்மார்ட் டிவி-ஐ வாங்குவதில் நீங்கள் முழுமையாக அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், இந்த புதிய ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ.4,199-க்கு வாங்க முடியும்.

ALSO READ:Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.99-க்கு கிடைக்கிறது Samsung போன் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News