யூடியூப் பிரபலமாக விருப்பமா? தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்..!!

Tamil Nadu Government free YouTube training Course : யூடியூப் மூலமாக பிரபல அந்தஸ்து மற்றும் வருமானம் பெறுவதற்கான பயிற்சியை தமிழ்நாடு அரசே இம்மாதம் வழங்குகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 14, 2025, 09:46 AM IST
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • இலவச யூடியூப் சேனல் தொடங்கும் பயிற்சி
  • விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்
யூடியூப் பிரபலமாக விருப்பமா? தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்..!!

Tamil Nadu Government free YouTube training Course : தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சொந்தமாக "வலையொளி" (யூடியூப்) சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் சொந்தமாக "வலையொளி" (யூடியூப்) சேனலை உருவாக்குதல்' என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் 16.06.2025 முதல் 18.06.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் கற்றுக்கொள்ளப்போவது:

- வலையொளி" (யூடியூப்) சேனல் உருவாக்கம்
- வீடியோ மற்றும் ஸ்லைட்ஷோ தயாரிப்பு
- சமூக ஊடகங்களை இணைக்கும் நுட்பங்கள்
- வாடிக்கையாளர் வலையமைப்பை விரிவுபடுத்தும் முறைகள்
- பயனுள்ள ஆன்லைன் சந்தைப்படுத்தல், ஊக்குவிப்பு
- டொமைன் பெயர் பதிவு மற்றும் ஹோஸ்டிங்
- இணையதள வடிவமைப்பு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள்
- இவற்றுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள்.

பயிற்சியில் கலந்து கொள்ள தகுதிகள்

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்காக, www.editn.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். தகவல் தொடர்புக்கு: 9543773337 / 93602 21280. 

தமிழ்நாடு அரசு இந்த பயிற்சி வகுப்புகளை மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தும். இதுதவிர பேக்கரி பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளும் நடக்கும். தேவைப்படுபவர்கள், தொழில் முனைவோர் ஆக வேண்டும் என விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனுபவம் உள்ளவர்களால் கொடுக்கப்படும் இந்த வழிகாட்டுதல்கள் உங்களின் சுய முன்னேற்றத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். பயிற்சி பெற்று ஒரு தொழிலை தொடங்கும்போது அதன் வெற்றி விழுக்காடு மிகவும் அதிகம். 

மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi vs BSNL: 30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க

மேலும் படிக்க | AC வாங்க சரியான நேரம்.. பாதி விலையில் விற்பனையாகும் TATA ஏசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News