Aadhaar update deadline : இந்தியாவில் எல்லா சேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக பெறும் சூழல் உருவாகிவிட்டது. ஏனென்றால் இதன் மூலம் ஒருவரின் அடையாளத்தை சீக்கிரம் உறுதிப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் வங்கி சேவைகள், சிம் கார்டு என ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களையும் ஆதார் கார்டு எண் இருந்துவிட்டாலே அறிந்து கொள்ள முடியும். இதற்காகவே ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இந்தியாவில் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் முகவரி, பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். எல்லா தகவல்களும் சரியாக இருந்தாலும் ஆதார் கார்டு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தால் புதிய கார்டு அப்ளை செய்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் வெப்சைட்டில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். அப்படி ஆதார் தகவலை புதுப்பிக்க UIDAI (ஒருங்கிணைந்த அடையாள அதிகாரம்) ஜூன் 14 வரை காலக்கெடு நிர்ணயித்து இருந்தது. இப்போது அந்த காலக்கெடுவை அடுத்து ஆண்டு வரை நீட்டித்துள்ளது. 14 ஜூன் 2026 வரை ஆதார் தவல்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். இதன் மூலம், பல கோடி பயனர்கள் தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனில் இலவசமாக திருத்திக்கொள்ளலாம்.
எந்த விவரங்களை புதுப்பிக்கலாம்?
- பெயர் (Name)
- முகவரி (Address)
- பிறந்த தேதி (Date of Birth)
- கைரேகை/கண் ஸ்கேன் (Biometrics - தேவைப்பட்டால்)
எப்படி ஆன்லைனில் புதுப்பிப்பது?
- myAadhaar Portal-ல் சென்று Aadhaar Number & OTP மூலம் லாகின் செய்யவும்.
- "Update Aadhaar" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- திருத்த வேண்டிய தகவலைத் தேர்ந்தெடுத்து, ஆதார ஆவணங்களை (PDF/PNG/JPEG - 2MBக்குள்) அப்லோட் செய்யவும்.
- முகவரிக்கு: மின்சார பில், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்றவை.
- பெயருக்கு: பிறப்புச் சான்றிதழ், பள்ளி/கல்லூரி ஆவணங்கள்.
- சமர்ப்பித்த பிறகு, UIDAI 10-15 நாட்களில் சரிபார்த்து உங்கள் முகவரிக்கு புதுப்பிக்கப்பட்ட ஆதார் அனுப்பும்.
கவனத்தில் கொள்க
* இலவச சேவை: 14 ஜூன் 2026 வரை மட்டுமே.
* ஆஃப்லைன் முறை: ஆதார் சென்டரில் செய்தால் ₹50-100 கட்டணம் செலுத்த வேண்டும்.
* ஆவணங்கள்: 2MBக்குள் PDF, JPEG, PNG ஃபார்மட்டில் மட்டுமே.
* ஸ்டேட்டஸ்: myAadhaar Portal-ல் Request ID கொண்டு டிராக் செய்யலாம்.
ஏன் ஆதாரை புதுப்பிக்க வேண்டும்?
வங்கி, SIM, ரயில் டிக்கட், GST போன்றவற்றுக்கு ஆதார் மெய்நிகர் KYC-க்கு தேவை. தவறான தகவல்கள் இருந்தால், சேவைகள் மறுக்கப்படலாம். மேலும் தகவலுக்கு:
UIDAI ஹெல்ப்லைன்: 1947, வலைத்தளம்: https://uidai.gov.in - தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க | மலிவான விலையில் Samsung Galaxy S24 Ultra வாங்கலாம்.. மிகப்பெரிய டிகவுண்ட் பெறலாம்
மேலும் படிக்க | AC வாங்க சரியான நேரம்.. பாதி விலையில் விற்பனையாகும் TATA ஏசி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ