Google passkeys: இனி பாஸ்வேர்டுக்கு பதில் கூகுள் பாஸ் கீ மட்டும் தான்..!

கூகுள் அக்கவுண்டுக்குள் நுழைவதற்கு கூகுள் பாஸ்வேர்டு தேவைப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக கூகுள் பாஸ் கீ-ஐ பயன்படுத்த அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. பாஸ்வேர்டு வேண்டும் என்று விருப்பப்பட்டால் வாடிக்கையாளர்கள் வைத்துக் கொள்ளலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 11, 2023, 07:42 PM IST
  • கூகிளில் இனி பாஸ்கீ முறை தான்
  • லாகின் செய்ய பாஸ்வேர்டு வேண்டாம்
  • தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்புக்கு அவசியம்
Google passkeys: இனி பாஸ்வேர்டுக்கு பதில் கூகுள் பாஸ் கீ மட்டும் தான்..! title=

கூகுள் நிறுவனம் முன்னெப்போதையும் விட, பாஸ்வேர்டு இல்லாமல் லாகின் செய்வதற்கான புதிய வழியான பாஸ் கீ-ஐ பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறது. தனிப்பட்ட கணக்குகளுக்கு பாஸ்வேர்டு என்பது யூசர்கள் விருப்பப்பட்டால் வைத்துக் கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பாஸ் கீ மட்டும் எதிர்காலத்தில் தொழில்நுட்ப கணக்குகளின் பாதுகாப்பு கவசமாக இருக்கும் என கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முன்னிறுத்துகின்றன. இதனால் இதுவரை புழக்கத்தில் இருந்த பாஸ்வேர்டுகள் வழக்கற்றும் போகும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரிலேயே Google, அதன் ஆண்ட்ராய்டு OS மற்றும் Chrome உலாவியில் பாஸ்கீ ஆதரவை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. மே 2023-ல், அது தனிப்பட்ட Google கணக்குகளுக்கும் இந்த அம்சத்தை நீட்டித்தது.

ஆனால் இப்போது பாஸ்கீகள் மட்டுமே இயல்பாக லாகின் செய்யும் முறையாக மாறிவிட்டது. இனி ஒவ்வொரு முறை உங்கள் கூகுள் அக்கவுண்டில் லாகின் செய்யும்போது, பாஸ் கீக்கள் அவசியமாகும். இதனால் நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டுக்குள் நுழைவதற்கு பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட வேண்டியதில்லை. அதாவது ஜிமெயில் உள்ளிட்ட எந்த கூகுள் அக்கவுண்டுக்கும் பாஸ்வேர்டு இனி தேவையில்லை. கூடுதலாக, நீங்கள் பாஸ் கீகளை இயக்கும் போது, உங்கள் Google கணக்கு செட்டிங்ஸ்களில் "முடிந்தால் கடவுச்சொல்லைத் தவிர்" விருப்பத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | ஜியோவின் திடீர் சர்ப்ரைஸ்... ஓடிடிகள் இலவசம், பம்பர் பலன்கள் - ஆண்டுக்கு இவ்வளவுதான்!

ஒருவேளை நீங்கள் பாஸ்கீ பயன்படுத்துவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், எப்போதும் போல் பாஸ்வேர்டு பயன்படுத்திக் கொள்ளலாம். பாஸ் கீ பயன்படுத்துவதைப் போலவே, உங்கள் ஸ்மார்போனை திறக்க கைரேகை, முகம் ஸ்கேன் அல்லது பின் பயன்படுத்தவும். அவை கடவுச்சொற்களை விட 40% வேகமானவை என்றும், அவற்றை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் கிரிப்டோகிராஃபி வகையை நம்பியிருப்பதாகவும் கூகுள் கூறுகிறது. இவை ஃபிஷிங்கில் இருந்து கூடுதல் பாதுகாப்பையும் கொடுக்கும். 

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, யூசர்கள் பாஸ் கீக்களைப் பயன்படுத்தி YouTube, தேடல் மற்றும் வரைபடம் போன்ற Google சேவைகளில் உள்நுழைய முடியும். Uber மற்றும் eBay போன்ற இயங்குதளங்களும் பாஸ்கீக்களை அறிமுகப்படுத்தியுள்ளன. வாட்ஸ்அப் செயலியிலும் இந்த அம்சம் விரைவில் வரவுள்ளதாக கூகுள் கூறுகிறது.

Googleக்கான பாஸ்கீகளை எவ்வாறு இயக்குவது?

தனிப்பட்ட கணக்குகள் ஒருபுறம் இருக்க, பாஸ்கீகள் ஆதரிக்கப்படும் இடங்களில் நீங்கள் உள்நுழைய விரும்பினால், கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
- myaccount.google.com க்குச் செல்லவும்.
- Secrurity என்பதைக் கிளிக் செய்யவும்
- Google இல் நீங்கள் எவ்வாறு உள்நுழைகிறீர்கள் என்பதன் கீழ் உள்ள பாஸ்கீக்களை கிளிக் செய்யவும்.
- பாஸ் கீகளைப் பயன்படுத்து பட்டனை கிளிக் செய்யவும்.
- கீழே உள்ள Create a Passkey பட்டனை கிளிக் செய்யவும்.
- புதிய பாஸ்கீக்களுடன் தகவலைச் சரிபார்க்கவும்.

மேலும் படிக்க | ரூ. 20 ஆயிரம் டேப்லட் இப்போது வெறும் ரூ.6,999 - கூடவே ஸ்பீக்கர் இலவசம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News