)
Electricity Bill Reducing Tips: கோடைக்கால வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், அனைவரும் அவரவர் வீடுகள் அல்லது அலுவலகங்ளில் ஏசி அருகிலேயே இருப்பதையே விரும்புகிறார்கள். கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, நம் கவனம் இயல்பாகவே ஏசி (AC), கூலர்கள் மற்றும் ஐஸ் ட்ரேக்கள் (ice trays) பக்கம் திரும்புகிறது.
நமக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டில் நாம் வாங்கும் காய்கள், பழங்கள், பால் என அனைத்துக்கும் இந்த பருவத்தில் அதிக குளிர்ச்சி தேவைப்படுகிறது. இந்த கடும் வெப்பத்தில் எந்த சமையலறை உபகரணம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அது உங்கள் குளிர்சாதனப் பெட்டி (refrigerator) தான்.
இந்த பருவத்தில் குளிர்சாதனப் பெட்டியைச் சரியாகப் பராமரிப்பது மிக முக்கியம். இதற்கு விலையுயர்ந்த கருவிகள் எதுவும் தேவையில்லை. வெறும் ஒரு A4 காகிதம் மூலம் குளிர்சாதனப் பெட்டியை சரியாக பராமரிப்பதோடு மின் கட்டணத்தையும் குறைக்கலாம்! ஆம், இது உண்மைதான்.
கோடைக்காலத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒரு காகிதத் துண்டை வைக்குமாறு நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? இங்கே தெரிந்துகொள்வோம்.
உலகின் பல பகுதிகள் தற்போது கடுமையான 'ஹீட் டோம்' (heat dome) எனப்படும் வெப்ப மண்டலத்தின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதீத வெப்பநிலை உங்களைச் சோர்வடையச் செய்வது மட்டுமல்லாமல், உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் மீதும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கும் குளிர்ச்சியைத் தக்கவைக்க, கம்ப்ரஸர் (compressor) தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது. இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுப்பதோடு, பாகங்கள் விரைவில் பழுதடைவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, வெப்பம் அதிகரிக்கும்போது உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் நிலையைச் சரிபார்ப்பது அவசியமாகும்.
உங்கள் குளிர்சாதனப் பெட்டியைச் சரிபார்க்க மெக்கானிக்கை அழைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சாதாரண A4 காகிதம் மட்டுமே இதற்கு போதுமானது. 30 வினாடி காகித உத்தி (30 Minute Paper Trick) பற்றி இங்கே காணலாம்.
இது ஏதோ ஒரு சாதாரண அல்லது போலியான இணைய உத்தி அல்ல. ஆற்றல் விரயத்தைத் தடுப்பதற்கான மிக எளிய வழிகளில் ஒன்று குளிர்சாதனப் பெட்டியின் கதவு சீலை (gasket) சரிபார்ப்பது என்று அமெரிக்க எரிசக்தித் துறையின் 'எனர்ஜி சேவர்' (Energy Saver) திட்டம் குறிப்பிடுகிறது. குளிர்சாதனப் பெட்டியின் சீல் காற்று புகாதவாறு இல்லையென்றால், குளிர்ந்த காற்று வெளியேறுவதைத் தடுக்க அதை உடனடியாக மாற்ற வேண்டும்.
தளர்வான சீல் உங்கள் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும்
பழுதடைந்த அல்லது தளர்வான ரப்பர் சீல் இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது குளிர்சதனப் பெட்டியின் மீதான அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், மின் கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கும்.