Aadhaar card Full Guide : ஆதார் கார்டை UIDAI (Unique Identification Authority of India) வழங்குகிறது. இதை ஆன்லைனில் விண்ணப்பித்து புதிதாக பெறலாம் அல்லது ஏற்கனவே உள்ள ஆதாரை மாற்றம்/திருத்தம் செய்யலாம்.
1. புதிய ஆதார் கார்டுக்கு ஆன்லைன் விண்ணப்பிப்பது
தேவையான ஆவணங்கள்: பிறப்பு சான்றிதழ் / பள்ளி சான்றிதழ்
முகவரி சான்று (வோட்டர் ஐடி, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக்)
மொபைல் நம்பர் (UIDAI-ல் பதிவு செய்யப்பட்டது)
UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் - https://uidai.gov.in -"Get Aadhaar" - "Book an Appointment" ஆப்சன்களை தேர்வு செய்யவும்
முகவரியைத் தேர்ந்தெடுக்கவும்: உங்கள் அருகிலுள்ள ஆதார் என்ரோல்மென்ட் சென்டர் (Enrolment Centre) தேர்வு செய்யவும்.
ஆன்லைன் ஸ்லாட் புக்கிங்: தேதி & நேரத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் அப்பாயின்மென்ட் எடுக்கவும். குறிப்பிட்ட நாளில் சென்று இ-சேவை சென்டரில் பயோமெட்ரிக் தரவை சமர்ப்பிக்கவும், உங்கள் கைரேகை, ஐரிஸ் ஸ்கேன் மற்றும் புகைப்படம் எடுக்கப்படும். ஆவணங்களை சரிபார்க்க கொடுக்கவும்.
ஆதார் எண் பெறுதல்: இந்த செயல்முறை முடிந்ததும், 28 இலக்க Enrollment ID கொண்ட ஆதார் விண்ணப்பத்துக்கான சான்று கொடுக்கப்படும். 90 நாட்களுக்குள் ஆதார் கார்டு உங்கள் முகவரிக்கு அஞ்சலில் வரும்.
2. ஏற்கனவே உள்ள ஆதாரை ஆன்லைனில் டவுன்லோட் செய்தல் (e-Aadhaar)
உங்கள் ஆதார் கார்டை இழந்துவிட்டால்/அச்சிட வேண்டுமென்றால், e-Aadhaar PDF ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். UIDAI வலைத்தளத்தில் https://eaadhaar.uidai.gov.in லாகின் செய்யவும். ஆதார் எண் (Aadhaar Number), என்ரோல்மென்ட் ஐடி (Enrollment ID) ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அந்த தகவலை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து OTPஐ பெறவும். அதனை உள்ளிட்ட பிறகு இ-ஆதார் காண்பிக்கப்படும். அந்த e-Aadhaar டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இ-ஆதாருக்கு பாஸ்வேர்ட், உங்கள் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் 4 எழுத்துகள் (CAPS-ல்) + பிறந்த ஆண்டு (எ.கா: RAJA1990).
3. ஆதார் விவரங்களை ஆன்லைனில் மாற்றுதல் (Name, Address, Photo, etc.)
உங்கள் ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம் போன்றவற்றை UIDAI வலைத்தளத்தில் திருத்தலாம். UIDAI-இன் https://ssup.uidai.gov.in வலைதளத்தில் "Update Aadhaar" பக்கத்திற்குச் செல்லவும். "Update Demographics Data Online" தேர்வு செய்யவும். ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP பெறவும். திருத்த வேண்டிய தகவலைத் தேர்ந்தெடுத்து ஆவணங்களை அப்லோட் செய்யவும். UIDAI சரிபார்த்து, 15 நாட்களுக்குள் மாற்றம் செய்யப்படும்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெற புது ரூல்ஸ் -இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!!
மேலும் படிக்க | விவசாயிகள் ஆதார் கார்டை போன்ற தேசிய அடையாள எண் ஏன் கட்டாயம் பெற வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









