Zoho Mail: இந்திய நிறுவனமான ஜோஹோ குழுமத்தின் ஜோஹோ மெயில் சேவை, அதன் உடனடி செய்தியிடல் செயலியான அரட்டையுடன் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஜோஹோ மெயிலில் ஒரு கணக்கை உருவாக்கினார். அதன் பிறகு அது இன்னும் அதிகமாக பிரபலமாகி வருகின்றது.
நீங்களும் ஜோஹோ மெயில் கணக்கை உருவாக்க வேண்டுமா? ஜோஹோ மெயில் கணக்கை உருவாக்கி உங்கள் அனைத்து ஜிமெயில் செய்திகளையும் அங்கு பெற விரும்பினால், அதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது. உங்கள் ஜிமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து எதிர்கால மின்னஞ்சல்களும் தானாகவே ஜோஹோ மெயிலுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் ஒரு சிறிய செட்டிங்கை மட்டும் சரிசெய்ய வேண்டும்.
இந்த அம்சம் உங்கள் தொலைபேசியில் அழைப்பு பகிர்தல் (call forwarding) போலவே செயல்படுகிறது. இதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்.
அனைத்து ஜிமெயில் மின்னஞ்சல்களையும் உங்கள் ஜோஹோ மெயில் கணக்கிற்கு அனுப்புவதற்கான வழிகாட்டி
- ஜிமெயிலில் வரும் மின்னஞ்சல்களை ஜோஹோ மெயிலுக்கு திருப்பிவிட, முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் மின்னஞ்சல் பகிர்தல் செட்டிங்கை ஆக்டிவ் செய்ய வேண்டும்.
- உங்கள் ஜிமெயில் கணக்கில் லாக் இன் செய்யவும்.
- செட்டிங்கிற்கு சென்று (பொதுவாக கியர் ஐகான் இருக்கும்), See All Settings என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- Forwarding and POP/IMAP டேபுக்குச் செல்லவும்.
- மேலே உள்ள ஃபார்வேர்டிங் பிரிவில், Add a forwarding address என்பதைக் கிளிக் செய்து உங்கள் ஜோஹோ மெயில் ஐடியை உள்ளிடவும்.
- பின்னர் ஜிமெயில், உங்கள் ஜோஹோ மெயில் கணக்கிற்கு உறுதிப்படுத்தல் இணைப்புடன் ஒரு சோதனை மின்னஞ்சலை அனுப்பும்.
- ஜோஹோ மெயிலில் பெறப்பட்ட மின்னஞ்சலில் உள்ள உறுதிப்படுத்தல் இணைப்பைக் கிளிக் செய்தவுடன், மின்னஞ்சல் ஃபார்வேர்டிங் விருப்பம் இயக்கப்படும்.
- இந்த செயல்முறைகளை முடித்த பிறகு, உங்கள் ஜிமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து இன்கமிங் மெயில்களும் உங்கள் ஜோஹோ மெயில் இன்பாக்ஸுக்கு வரத் தொடங்கும்.
Zoho Mail: மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான செட்டிங்ஸ்
ஃபார்வேர்டிங் விருப்பத்தை செட் செய்யும் போது, மின்னஞ்சலின் ஒரிஜினல் காபியை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஜிமெயில் உங்களிடம் கேட்கும். இதற்கு உங்களிடம் பல விருப்பங்கள் உள்ளன:
- Keep Gmail's copy in the Inbox: மின்னஞ்சலின் நகல் உங்கள் ஜிமெயில் மற்றும் ஜோஹோ மெயில் இன்பாக்ஸ், இரண்டியிலும் இருக்க வேண்டுமென்றால் இதைத் தேர்வுசெய்யவும்.
- Mark Gmail's copy as read: இது மின்னஞ்சலை ஜிமெயிலில் வைத்திருக்கும், ஆனால் அதன் நிலையை "read” என்று மாற்றும்.
- Archive Gmail's copy: இது அசல் மின்னஞ்சலை பிரதான ஜிமெயில் இன்பாக்ஸிலிருந்து வெளியே நகர்த்தும்.
- Delete Gmail's copy: இது உங்கள் ஜோஹோ மெயில் கணக்கில் மட்டுமே மின்னஞ்சல் இருப்பதை உறுதி செய்கிறது.
உங்கள் விருப்பம் மற்றும் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸை செக் செய்வதை முற்றிலுமாக நிறுத்த விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்து இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் படிக்க | GMail to Zoho Mail: டிரெண்ட் ஆகும் ஜோஹோ மெயில்.. எப்படி மாறுவது? முழு செயல்முறை இதோ
மேலும் படிக்க | Zoho Soundbox, பிஓஎஸ் இயந்திரங்கள் அறிமுகம்: அடுத்த குறி GPay, Paytm, PhonePe
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









