)
Diwali train ticket booking : தீபாவளி அக்டோபர் 20 அன்றும், சத் பூஜை அக்டோபர் 25 அன்றும் கொண்டாடப்படவுள்ள நிலையில், பண்டிகை காலப் பயணங்களுக்கான உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தயாராகி வருகின்றனர். இதனால், ரயில் டிக்கெட்டு புக்கிங் ஆன்லைனில் குவிகின்றன. இந்த சூழலில், பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்வே சில முக்கிய விதிகளை மாற்றியமைத்து, உறுதி செய்யப்பட்ட இருக்கையைப் பெற உதவும் சில குறிப்புகளையும் வழங்கியுள்ளது.
இந்திய ரயில்வே விதிமுறை
முன்பு 120 நாட்களாக இருந்த ரயில் டிக்கெட் முன்பதிவு காலம், தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பயணி தனது பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். உதாரணமாக, அக்டோபர் 20 அன்று தீபாவளிக்காகப் பயணிக்க விரும்பினால், ஆகஸ்ட் 20 அன்றே முன்பதிவு தொடங்கிவிட்டது. ரயில் புறப்படும் இடம் ஒரு நாள் தாமதமாக இருந்தால், 61 நாட்களுக்கு முன்பும் முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு டிப்ஸ்
1. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரயில்கள் நிரம்பிவிடுவதால், பயணிகள் தங்களின் பயணத்தை கவனமாகத் திட்டமிட வேண்டும்.
2. ஒருவேளை டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், வேறு எந்தெந்த ஊர் வழியாக ரயில் பயணம் செய்து சொந்த ஊருக்கு செல்லலாம் என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும்
3. நீண்ட தொலைவு செல்லக்கூடியவர்கள் சிரமமின்றி செல்ல வேண்டும் என்றால் இரண்டு மூன்று ரயில்கள் மாறிக்கூட பயணம் செய்யலாம்.அதற்கு ஏற்ப திட்டமிட்டு ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும்.
4. புக்கிங் செய்யும்போதே'மாற்று ரயில்கள்' (Alternate Trains) என்ற விருப்பத்தைப் பயன்படுத்தவும். இது உங்கள் வழித்தடத்தில் உள்ள மற்ற ரயில்களில் உள்ள காலியிடங்களை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
தீபாவளி போன்ற மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் உங்கள் தொடக்க இடத்தில் இருந்து சேருமிடத்திற்கு நேரடியாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், மாற்று வழிப் பயணத்தை (break journey) தேர்வு செய்வது ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும். உதாரணமாக, சென்னையில் இருந்து பீகாருக்கு செல்ல நேரடி டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், ஆந்திரா, ஒடிசா அல்லது பூனே போன்ற இடங்களுக்கு முதலில் டிக்கெட் முன்பதிவு செய்து, அங்கிருந்து பீகாருக்கு மற்றொரு ரயிலைப் பிடிக்கலாம். இது சற்று கடினமானதாக இருந்தாலும், பண்டிகை காலங்களில் சொந்த ஊர் சென்றடைய இது ஒரு சிறந்த வழியாகும்.
ஏனென்றால், இந்த பண்டிகைக் காலங்களில், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் பிற மாநிலங்களை நோக்கி அதிகபட்ச பயணிகள் செல்கின்றனர். ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கும் என்றாலும், முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ