சாட்ஜிபிடி மூலம் மியூசிக் கற்றுக் கொள்வது எப்படி? இசை உருவாக்குவது எப்படி?

Technology News Tamil : சாட்ஜிபிடி ஏஐ தொழில்நுட்பம் மூலம் இசை உருவாக்குவது எப்படி, இசை கற்றுக் கொள்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2025, 03:08 PM IST
  • இசை கற்றுக்கொள்ள ஆர்வமா?
  • சாட்ஜிபிடி மூலம் கற்றுக்கொள்ளலாம்
  • எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சாட்ஜிபிடி மூலம் மியூசிக் கற்றுக் கொள்வது எப்படி? இசை உருவாக்குவது எப்படி?

Technology News : உங்களுக்கு தனித்திறமை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தால், சாட்ஜிபிடி, டீப் சீக் போன்ற ஏஐ தொழில் நுட்பங்கள் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். தொலைபேசி மட்டும் இணைய வசதியுடன் இருந்தால் நீங்கள் விரும்பும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளலாம். மியூசிக், பல மொழிகளை கற்பது உள்ளிட்ட பல வித்தைகளை அது கற்றுக்கொடுக்கும். அந்தவகையில் இசையை கற்றுக்கொள்வது குறித்து சாட்ஜிபிடியிடம் என்னென்ன கேள்விகளை கேட்டால் எப்படி பதில் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

1. அடிப்படை இசை தகவல்கள் தெரிந்து கொள்வது?

முதலில் ChatGPT- வலைதளத்துக்கு சென்று உங்கள் பெயரில் அக்கவுண்ட் கிரியேட் செய்யுங்கள். அக்கவுண்ட் இல்லையென்றாலும் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். அக்கவுண்ட் இருந்தால் கூடுதல் மற்றும் துல்லியமான தகவல்களை பெறலாம். அந்தவகையில் சாட்ஜிபிடி மூலம் நீங்கள் இசை கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் அக்கவுண்ட் கிரியேட் செய்த பிறகு  ChatGPT யிடம் கீழே உள்ளது போன்ற கேள்விகளை கேட்கலாம்:

"Carnatic music basics in Tamil"
"What is Sa Re Ga Ma in Indian music?"
"Western music scales explained in Tamil"
"What is Shruti and Laya in music?"

இந்த கேள்விகளுக்கு சாட்ஜிபிடி தமிழில் எளிதான விளக்கத்தை கொடுக்கும். இன்னும் சந்தேகம் இருந்தால் அதற்கு கீழே கேட்டால் அதற்கான விளக்கத்தையும் கொடுக்கும். உங்களுக்கு விருப்பமான மொழியில் சாட்ஜிபிடியிடம் உரையாடலாம்.

2. பாடல்கள் படிக்க உதவுதல்

உங்கள் விருப்பமான பாடல்களை ஒவ்வொரு வரியையும் ஸ்வரங்களோடு அல்லது ரசனையோடு ChatGPT-ல் கேட்டால்:

"Give swaras for the song ‘Vaishnava Janato’"
"Translate and explain 'Kanmani Anbodu Kadhalan' lyrics in Tamil" என்று கேட்டால், வரிகளை கொடுக்கும்.

3. இசை புரிதல் வளர்த்தல்

ராகங்கள் பற்றி விளக்கம் கேட்கலாம்: "Explain Shankarabharanam raga in Tamil"
தாளங்கள் பற்றி கேட்கலாம்: "What is Adi Talam? Give examples."

ChatGPT மூலம் இசையை உருவாக்குவது எப்படி?

1. புதிய பாடல் வரிகள் எழுது 

"Write a romantic Tamil song lyrics in 4 lines with rhyme" என கேட்கலாம்.

உதாரணமாக "மழை போல விழும் என் காதல் வா...
கனவில் வரும் உன் நிழலோ வா...
இதழில் மிதக்கும் உன் பேர் வா...
இதயத்தில் என்றும் இடம் வா..." என எழுதிக் கொடுக்கும். உங்களுக்கு தேவையான ஸ்விட்சுவேசனை சொல்லி, எந்த வார்த்தையில் தொடங்க வேண்டும் என்பதையும் தெரிவித்தால், பாடலை சாட்ஜிபிடி எழுதிக்கொடுக்கும்.

2. ஸ்வரங்களுடன் ஸ்மால் கம்போசிஷன்

"Compose a simple Carnatic tune in Mayamalavagowla with swaras" என்று கேட்டால்

Sa Ri1 Ga3 Ma1 Pa Da1 Ni3 Sa

Sa Ni3 Da1 Pa Ma1 Ga3 Ri1 Sa

இவை மெலடி காக பயன்படுத்தலாம் (keyboard, flute, etc.). இப்படியான நோட்ஸ் கொடுக்கும் சாட்ஜிபிடி, ராகத்தை வாசிக்க என்ன கருவிகளை பயன்படுத்தலாம் என்பதையும் கூறிவிடும்.

3. அரங்கேற்றத்திற்கு Lyrics + Tune Combo

"Give me a devotional Tamil song lyrics with melody notes"  என கேட்டால் ChatGPT உங்கள் சொந்த தேவைகளுக்கேற்ப ஒரு மெலோடியை உருவாக்கலாம். குறிப்பாக ராகம், தாளம் குறித்த தகவலை கொடுத்தால் அது இசையை உருவாக்கிக் கொடுக்கும்.

இசைக் கருவிகள்

- ChatGPT-யுடன் இணைந்து AI Music Generators (e.g., Suno.ai, Soundraw, AIVA) பயன்படுத்தலாம்.
- MIDI notes உருவாக்கி இசைக்கருவிகளில் வாசிக்கலாம்.
- GarageBand, FL Studio போன்ற Music DAW-களில் பயன்படுத்தலாம் என சாட்ஜிபிடி கூறும். இதுபோன்று உங்களுக்குள் எழும் அனைத்து சந்தேகங்களையும் சாட்ஜிபிடி, டீப் சீக் போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்தி விடைகளை பெற்றுக் கொள்ளுங்கள். தனித்திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | DigiLocker: உங்கள் முக்கிய ஆவணங்களை டிஜிலாக்கர் மூலம் பாதுகாப்பது எப்படி? முழு செயல்முறை இதோ

மேலும் படிக்க | ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி... உடனே இந்த அப்டேட்டை தெரிந்து கொள்ளவும்..!

மேலும் படிக்க | Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News