Aadhaar Card: இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக உள்ளது. ஆகையால், இதில் உள்ள தகவலை சரியாகவும் பாதுகாப்பாகவும் வைப்பது மிக அவசியமாகும்.
உங்கள் ஆதார் தகவல்கள், ஆதார் அட்டை விவரங்கள் திருடப்படக்கூடும் அல்லது கசியக்கூடும் என்ற கவலை உங்களுக்கு உள்ளதா? ஆதார் அட்டையின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இப்போது உங்கள் ஆதாரை டிஜிட்டல் முறையில் லாக் செய்ய முடியும். உங்கள் கைரேகை, ஐரிஸ் ஸ்கேன் மற்றும் முகத் தரவு போன்ற தகவல்களை இனி டிஜிட்டல் வழியில் லாக் செய்ய முடியும்.
இதைச் செய்வதன் மூலம், ஆன்லைன் மோசடி செய்பவர்களிடமிருந்து உங்கள் ஆதார் விவரங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். UIDAI இன் பயோமெட்ரிக் லாக் அம்சத்தின் உதவியுடன், உங்கள் தனிப்பட்ட ஆதார் தரவை மோசடி செய்பவர்களின் கைக்கு எட்டாதவாறு செய்யலாம். இந்த டிஜிட்டல் லாக்கை நீங்கள் ஆக்டிவேட் செய்யும்போது அல்லது இந்த அம்சத்தை இயக்கும்போது, கைரேகை, ஐரிஸ் ஸ்கேன் மற்றும் முகத் தரவு போன்ற உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் முற்றிலும் பாதுகாப்பாகிவிடும்.
இதற்குப் பிறகு, நீங்கள் விரும்பினால் தவிர வேறு யாரும் இந்தத் தரவைப் பயன்படுத்த முடியாது. ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் இந்த அம்சத்தை ஆன் செய்ய வேண்டும், அதாவது இயக்க வேண்டும். இது உங்கள் ஆதார் தரவின் பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் பெயரில் வழங்கப்பட்ட அரசாங்க ஆவணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்தி உங்கள் ஆதாரைப் பாதுகாப்பாக வைத்திருந்தால், மோசடிக்காரர்கள் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், உங்கள் பெயரில் வங்கியில் புதிய சிம் அல்லது KYC ஐப் பெற முடியாது. இந்த வழியில், மோசடி செய்பவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கான அனைத்து வழிகளையும் நீங்கள் தடுத்து விடலாம்.
உங்கள் ஆதாரைப் பாதுகாக்க, முதலில் நீங்கள் ஒரு VID ஐ உருவாக்க வேண்டும். UIDAI வலைத்தளத்திற்கு சென்று இதை எளிதாக உருவாக்கலாம். VID ஐ உருவாக்கியதும், இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
- முதலில் UIDAI இன் myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும்.
- இங்கே, கீழே ஸ்க்ரோல் செய்த பிறகு, 'Lock/Unlock Aadhaar' விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
- கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்த பிறகு, 'Next' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் VID, முழுப் பெயர், PIN குறியீடு மற்றும் captcha குறியீடு போன்ற சில விவரங்களை உள்ளிட்டு OTP ஐக் கோரவும்.
- உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐச் சமர்ப்பித்து, உங்கள் ஆதார் பயோமெட்ரிக்கை உடனடியாகப் லாக் செய்யவும்.
மேலும் படிக்க | ரூ.12,000 டிஸ்கவுண்ட் விலையில் விற்பனையாகும் Samsung Galaxy S25 Edge
மேலும் படிக்க | பாதி விலையில் விற்பனையாகும் ஏசி.. இன்றே தள்ளுபடியில் வாங்கிப் போடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ