உங்கள் வீட்டு ஏசி வெடிக்காமல் இருக்க நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!

AC Tips Tamil : கோடைகாலத்தில் ஏசி வெடிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற பாதுகாப்பான வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - S.Karthikeyan | Last Updated : May 15, 2025, 08:10 PM IST
  • கோடைகால முக்கிய டிப்ஸ்
  • ஏசி பாதுகாப்பாக இருக்க
  • கட்டாயம் இதை பின்பற்றுங்கள்
உங்கள் வீட்டு ஏசி வெடிக்காமல் இருக்க நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!

AC Tech News Tamil : கோடைக்காலத்தில் ஏர் கண்டிஷனர் (ஏசி) இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் அல்லது தவறான பயன்பாடு காரணமாக ஏசி வெடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இது மின்சார கோளாறுகள், கூலிங் காரணமாக ஏற்படும் கசிவுகள் அல்லது அதிகப்படியான அழுத்தம் போன்ற காரணிகளால் ஏற்படலாம். இதனால் உயிருக்கும், உங்கள் வீட்டுக்கும் பெரும் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ஏசியை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

1. பிராண்ட் ஏசி வாங்குதல்

ஏசி வாங்கும்போது நம்பகமான பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விலை குறைவாக இருப்பதால் தரமில்லாத பொருட்களை வாங்குவது ஆபத்தானது. மேலும், ஏசியை நிறுவும் போது பயிற்சி பெற்ற மெக்கானிக்கை அழைப்பது முக்கியம். ஏனென்றால் ஏசி சரியாக நிறுவப்படாவிட்டால், Refrigeration கசிந்து வெடிக்கும் அபாயம் உள்ளது.

2. வழக்கமான பராமரிப்பு

ஏசியின் செயல்திறனைப் பராமரிக்கவும், வெடிப்பு அபாயத்தைத் தவிர்க்கவும் வழக்கமான சர்வீஸிங் அவசியம்.  ஏர் ஃபில்டர்களை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். தூசி அதிகமாக சேர்ந்தால், Refrigeration சரியாக பாயாமல் அழுத்தம் அதிகரிக்கும். அவுட்டூர் யூனிட் (Outdoor Unit) அடிக்கடி சரிபார்க்க வேண்டும். இலையும், குப்பைகளும் அடைப்பை ஏற்படுத்தி வெப்பம் அதிகரிக்கும். ட்ரைனேஜ் பைப்லைன் தடைபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும்.

3. மின்சார பாதுகாப்பு

ஏசி அதிக மின்சாரம் பயன்படுத்தும் சாதனம் என்பதால், மின் கோளாறுகள் வெடிப்புக்கு வழிவகுக்கும். வோல்டேஜ் ஸ்டேபிலைசர் பயன்படுத்தவும். மின்னழுத்தம் ஏற்ற இறக்கம் ஆகும்போது ஏசி கம்ப்ரசர் பழுதடையலாம். ஏசிக்கு தனி மின்தொடர்பு (Dedicated Circuit) வழங்கவும். பல சாதனங்களை ஒரே சாக்கெட்டில் இணைப்பது ஓவர்லோடிங் ஏற்படுத்தும்.

4. குளிர்பதன (ரெஃபிரிஜெரண்ட்) கசிவு

Refrigeration கசிந்தால், ஏசி செயல்பாடு பாதிக்கப்படும் மட்டுமல்லாமல், வெடிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஏசி குளிர்ச்சியாக இல்லாமல் இருத்தல், அசாதாரண ஓசை, மின்சார பில் திடீரென அதிகரித்தல் ஆகியவை ஏசியில் கசிவு உள்ளது என்பதற்கான அடையாளங்கள் ஆகும். இப்படியான சூழலில் உடனடியாக ஏசியை அணைத்து, அங்கீகரிக்கப்பட்ட டெக்னீஷியனை அழைக்கவும்.

5. அவசர நடவடிக்கைகள்

ஏசியில் இருந்து புகை அல்லது தீப்பிடிப்பு ஏற்பட்டால், உடனடியாக மெயின் பவரை அணைக்கவும். தீயணைப்பு உபகரணங்களை (Fire Extinguisher) பயன்படுத்தவும். தீயணைப்பு துறை (101) அல்லது மின்சார வாரியத்தை அழைக்கவும்.

6. தொழில்நுட்ப சப்போர்ட்

வருடத்திற்கு இரண்டு முறை அதாவது, கோடைக்கு முன்பு மற்றும் பின்பு ப்ரொஃபஷனல் சர்வீஸிங் செய்வது நல்லது. ஏசி பிராண்டின் அதிகாரப்பூர்வ சேவை மையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஏசி வெடிப்பது ஒரு தீவிரமான பிரச்சினையாகும், ஆனால் சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் இதை எளிதாகத் தவிர்க்கலாம். உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காக, மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைக் கடைபிடிக்கவும்.

மேலும் படிக்க | வந்தாச்சி சாம்சங்கின் மிக மெல்லிய ஸ்மார்ட்ஃபோன்.. விலை எவ்வளவு?

மேலும் படிக்க | உங்கள் குழந்தைகளுக்கு பான் கார்டு.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News