தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை தொடங்குவது எப்படி? முழு விவரம்

TN Esevai : தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை தொடங்குவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jul 4, 2025, 02:06 PM IST
  • தமிழ்நாட்டில் இசேவை மையம் தொடங்கலாம்
  • இசேவை மையம் தொடங்க விண்ணப்பிப்பது எப்படி?
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்
தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை தொடங்குவது எப்படி? முழு விவரம்

How to Start TN eSevai Center : தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது (TNeGA) "அனைவருக்கும் இ-சேவை வழங்கும் திட்டத்தின்" கீழ் அனைவரும் விண்ணப்பிக்க வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இசேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Add Zee News as a Preferred Source

இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கம்ப்யூட்டர் (Computer), பிரின்ட்டர் (Printer), ஸ்கேனர் (Scanner), கைரேகை அங்கீகார சாதனம்( Biometric device), இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் (Ramp) போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிந்து கொள்ள tnesevai இணையதளத்தை பயன்படுத்தவும்.

ஆனால், தமிழ்நாடு அரசின் இ-சேவை (tn e sevai) மையத்தை தொடங்க வேண்டும் என்றால்www.tnesevai.tn.gov.in (அல்லது) www.tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் விண்ணப்பத்தை சரிபார்க்கப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000/- மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000/- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அல்லது தமிழ்நாடு அரசின் மின்ஆளுமை முகமை அலுவலகத்தைக் கூட தொடர்பு கொள்ளலாம். 

மேலும் படிக்க | நாளை முதல் ரயில்வே புதிய விதிகள்: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

மேலும் படிக்க | சுகன்யா சம்ரிதி யோஜனா: PNB ONE செயலியில் ஆன்லைனில் திறப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News