Indigo Flights Latest News: இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தொடர்ந்து நான்காவது நாளாக பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. டிசம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் உட்பட பல விமான நிலையங்களில் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Indigo Problem: டெல்லியில் மிகப்பெரிய தாக்கம்
இந்தியாவில் இந்த நெருக்கடியின் மிகப்பெரிய தாக்கம் டெல்லியில் உணரப்படுகிறது. அங்கு அதிகபட்சமாக 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்திலிருந்து இன்றிரவு வரை புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இண்டிகோ ரத்து செய்துள்ளது. புனே மற்றும் ஹைதராபாத்தில் தலா 32 விமானங்களும், பெங்களூருவில் 102 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதும், விமான நேரங்களில் தாமதம் ஏற்பட்டு வருவதும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகளை துயரத்தில் ஆழ்த்துகின்றன. பல பயணிகள் தங்கள் விமானங்களும் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். நீங்களும் இண்டிகோவில் விமான டிக்கெட் புக் செய்து இதே குழப்பத்தில் உள்ளீர்களா? உங்கள் விமானத்தின் நிலையை எவ்வாறு செக் செய்வது? நிகழ்நேர விமான புதுப்பிப்புகளை எவ்வாறு பெறுவது? இவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
How to Check Flight Status
1. விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் / மொபைல் செயலியை
உங்கள் விமான நிலையைச் செக் செய்ய மிகவும் நம்பகமான வழி உங்கள் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலியை அணுகுவது. உங்கள் முன்பதிவு ஐடி அல்லது PNR எண்ணை உள்ளிட்டு, நீங்கள் செல்ல வேண்டிய விமானம் பற்றிய துல்லியமான தகவலைப் பெறலாம். பல விமான நிறுவன செயலிகள் உங்களுக்கு புஷ் அறிவிப்புகளையும் அனுப்புகின்றன. உங்கள் விமான நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கின்றன.
2. விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் நம்பகமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு விமான நிலையத்தின் வலைத்தளத்திலும் Arrivals மற்றும் Departures -களுக்கான ஒரு தனி பிரிவு உள்ளது. அங்கு நீங்கள் விமானத்தின் எண்ணை உள்ளிட்டு விமானத்தைன் நேரடி நிலையைச் செக் செய்யலாம். விமானம் ரத்து செய்யப்பட்டாலோ, தாமதம் ஆனாலோ அல்லது போர்டிங்க் கேட்டில் மாற்றங்கள் இருந்தாலோ, அனைத்து தகவல்களும் இதில் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன.
3. மூன்றாம் தரப்பு செயலிகள்
பயணிகள் விரும்பினால் மூன்றாம் தரப்பு செயலிகளியயும் பயன்படுத்தலாம். பல விமான டிக்கெட் முன்பதிவு செயலிகள் விமானத்தின் நிலையை வழங்குகின்றன. இந்த தளங்கள் நிலையை வழங்குவது மட்டுமல்லாமல், விமானத்தின் லைவ் ஸ்டேட்டஸ், மதிப்பிடப்பட்ட வருகை நேரம் (ETA) மற்றும் தாமதத்திற்கான காரணத்தையும் வழங்குகின்றன.
4. மொபைல் மூலம் அலர்ட்
உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது உங்கள் சரியான மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் வழங்கியிருந்தால், விமான நிறுவனம் உங்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் வழியாக அறிவிப்புகளை அனுப்பும். விமான தாமதங்கள், கேட் மாற்றங்கள் அல்லது ரத்து என எதுவாக இருந்தாலும், உங்கள் தொலைபேசியில் நேரடியாக எச்சரிக்கைகளைப் பெறுவீர்கள்.
இவை தவிர விமான நிறுவனங்களின் சமூக ஊடக தளங்களையும், குறிப்பாக X கணக்கையும் பயணிகள் கண்காணிக்கலாம். தொழில்நுட்ப சிக்கல்கள் அல்லது வானிலை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட விமானங்கள் குறித்த புதுப்பிப்புகளை விமான நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆன்லைனில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து தகவல்களை பெறலாம்.
மேலும் படிக்க | புத்தாண்டு மெகா ஆஃபர்! 200 நாள் ரீசார்ஜ், 1% தங்கம் - அம்பானி அறிவிப்பு!
மேலும் படிக்க | Realme P4X: அட்டகாசமான பேட்டரி, நம்ப முடியாத விலை... களத்தில் குதிக்கும் புதிய போன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









