iPhone 17 Pro மற்றும் Galaxy S26 Ultra-வுக்கு சவால் விடும் டாப் கேமரா போன்கள்!

Best Android Camera Smartphone List 2026: 2026 ஆம் ஆண்டில், சிறந்த கேமரா அம்சங்களுடன் வரும் சில மலிவான ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அவற்றின் பட்டியலை இங்கே சரிப்பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 11, 2026, 12:30 PM IST
  • ஐபோன் 17 அதன் ப்ரோ மாடலுக்கு ஒரு நல்ல மாற்றாகும்.
  • மூன்று 50MP கேமரா அமைப்பு உள்ளது.
  • Oppo Find X9 Pro வலுவான கேமரா போன்களில் ஒன்றாகும்.
iPhone 17 Pro மற்றும் Galaxy S26 Ultra-வுக்கு சவால் விடும் டாப் கேமரா போன்கள்!

Best Android Camera Smartphone List 2026: பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் வாங்கும்போது முதலில் கேமரா தரத்தையே முதன்மையாக கருத்தில் கொள்கிறார்கள். ஒரு சிறந்த கேமரா கொண்ட போனை வாங்க வேண்டும் என்றால், அந்த போன் கட்டாயம் விலையுயர்ந்த தொலைபேசியாக மட்டுமே இருக்கும் என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, Samsung Galaxy S26 Ultra மற்றும் iPhone 17 Pro இந்த இரண்டு போன்களின் கேமராவும் மிகவும் சிறந்தது என்று கருதப்படுகின்றன, ஆனால் இவற்றில் விலை பல லட்சங்கள் ஆகும். 

Add Zee News as a Preferred Source

இருப்பினும், இந்த 2026 ஆம் ஆண்டில், சிறந்த கேமரா அம்சங்களுடன் வரும் சில மலிவான ஸ்மார்ட்போன்கள் உள்ளன. மேலும் இந்த போன்களில் சக்திவாய்ந்த கேமரா சென்சார்கள், மேம்பட்ட செயலிகள் மற்றும் சிறந்த காட்சிகளைக் கொண்டுள்ளன, அவை புகைப்படம் எடுப்பதற்கான சிறந்த விருப்பங்களாக அமைகின்றன. எனவே கேமரா செயல்திறன் அடிப்படையில் ஃபிளாக்ஷிப் போன்களுடன் போட்டியிடக்கூடிய இந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Vivo X300 Pro 

Vivo X300 Pro இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த கேமரா ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். சுமார் ரூ.1,09,999 விலையில் கிடைக்கும் இந்த போன் ஜூம் புகைப்படம் எடுப்பதற்கு பெயர் பெற்றது. இந்த தொலைபேசியில் 200MP பெரிஸ்கோப் கேமரா உள்ளது. அதுமட்டுமின்றி இதில் 50MP முதன்மை சென்சாரையும் கொண்டுள்ளது.

இந்த தொலைபேசியில் Zeiss Color Science மற்றும் Cinematic Video கருவிகளும் உள்ளன, அவை வீடியோ பதிவை மேலும் மேம்படுத்த உதவுகின்றன.

Google Pixel 10 Pro XL

இயற்கையான, உண்மையான ஒரிஜினல் வண்ணங்களுடன் புகைப்படம் எடுக்க விரும்பினால், Google Pixel 10 Pro XL சிறந்த தேர்வாக இருக்கலாம். இதன் விலை சுமார் ரூ.1,24,999 ஆகும். கூகிளின் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், இந்த போனின் கேமரா மிகவும் சிறப்பான புகைப்படங்களை தருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த தொலைபேசியில் மேம்பட்ட HDR செயலாக்கம் மற்றும் அகலமான, அல்ட்ரா-வைட் மற்றும் பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ்கள் உள்ளிட்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் கேமரா மாறுபட்ட லைட்டிங் நிலைகளிலும் கூட சீரான மற்றும் துல்லியமான வண்ணங்களுடன் புகைப்படங்களை கிளிக் செய்ய உதவுகிறது.

Oppo Find X9 Pro 

Oppo Find X9 Pro வலுவான கேமரா போன்களில் ஒன்றாகும், இதன் விலை சுமார் ரூ.1,09,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் Hasselblad உள்ளது. இது புகைப்படங்களில் டீப் மற்றும் இயற்கையான டோன்களை வழங்க உதவுகிறது. இந்த தொலைபேசியில் முதன்மை சென்சார் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட பெரிஸ்கோப் ஜூம் கேமரா ஆகியவை உள்ளன, இதனால் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கும். இந்த தொலைபேசி தொழில்முறை தர வீடியோ பதிவையும் ஆதரிக்கிறது.

OnePlus 15

நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் ஒரு சிறந்த கேமரா தொலைபேசியைத் தேடுகிறீர்களானால், OnePlus 15 ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இதன் விலை சுமார் ரூ.72,999 ஆகும். இந்த தொலைபேசியில் மூன்று 50MP கேமரா அமைப்பு உள்ளது, இது பல்வேறு லைட்டிங் நிலைகளில் நல்ல முடிவுகளை வழங்குகிறது. கூடுதலாக, தொலைபேசி 8K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. தொலைபேசி Snapdragon 8 Elite Gen 5 செயலியால் இயக்கப்படுகிறது.

iPhone 17

ஐபோன் 17 அதன் ப்ரோ மாடலுக்கு ஒரு நல்ல மாற்றாகும். இதன் விலை சுமார் ரூ.82,900 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை 48MP பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இது சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ தரத்தை வழங்குகிறது. சென்சார்-ஷிப்ட் OIS, 4K டால்பி விஷன் HDR வீடியோ பதிவு மற்றும் 3D ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் உள்ளன. ப்ரோ மாடலின் சில அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும், அடிப்படை கேமரா அனுபவம் மிகவும் வலுவாக உள்ளது.

மேலும் படிக்க | ரூ.30,000 தான் உங்க பட்ஜெட் ஆ? இதுதான் டாப் சிறந்த 5 AI ஸ்மார்ட்போன்கள்

மேலும் படிக்க | ரூ.10,000-க்கும் கீழே 5G போன் வாங்கணுமா? இதோ சிறந்த ஆப்ஷன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News