PAN card status check : பான் எண் மற்றும் TAN (வரி விலக்கு மற்றும் வசூல் கணக்கு எண்) தொடர்பான சேவைகளை ஒரே போர்ட்டலில் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு சமீபத்தில் பான் 2.0-ஐ அறிமுகப்படுத்தியது. அதேநேரத்தில் பழைய பான் கார்டுகள் செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டுடன் இருக்கும். மேலும் திருத்தம் அல்லது அப்டேட் இல்லாவிட்டால் பழைய பான் கார்டுதாரர்கள் பான் 2.0 இன் கீழ் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். சில நேரங்களில், தனிநபர் பல பான் கார்டுகளை வைத்திருந்தால், அல்லது பான் கார்டுக்கு எதிராக சில மோசடி நடவடிக்கைகள் இருந்தால் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வருமானவரித் துறை பான் அட்டையை செயலிழக்கச் செய்யலாம். அதனால், உங்கள் பான் கார்டு இன்னும் செயலில் உள்ளதா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
உங்கள் PAN கார்டு செயலில் உள்ளதா என்பதை எப்படி சரிபார்க்கலாம்?
- Income Tax e-filing வலைத்தளத்திற்கு செல்லவும் (https://www.incometax.gov.in/iec/foportal/)
- "Verify Your PAN" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் PAN எண், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் முழுப் பெயர் ஆகியவற்றை உள்ளிடவும்
- OTP உங்கள் மொபைலுக்கு வரும், அதை உள்ளிடவும்
- "Validate" என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் PAN செயலில் இருந்தால், "Your PAN is active" என்ற செய்தி காண்பிக்கப்படும்
PAN கார்டு Inoperative (செயல்படாத நிலை) ஆக இருக்கும் நேரங்கள்
உங்கள் PAN கார்டை Aadhaar உடன் இணைக்கவில்லை என்றால், அது Inoperative ஆகிவிடும். PAN-Aadhaar லிங்கிங் ஜூன் 30, 2023க்குள் முடிக்கப்படாவிட்டால், ஜூலை 1, 2023 முதல் PAN செயல்படாததாகிவிடும்.
PAN-Aadhaar லிங்கிங் செய்யாவிட்டால் என்ன தண்டனை?
ரூ. 1,000 அபராதம் செலுத்தி Aadhaar உடன் PAN ஐ இணைக்க வேண்டும்.
Inoperative PAN கார்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?
Income Tax e-filing போர்ட்டில் "Link Aadhaar" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
ரூ. 1,000 அபராதம் செலுத்தவும் (இந்தத் தொகை திருப்பி வழங்கப்படாது)
PAN மற்றும் Aadhaar -ஐ இணைக்கவும்
Inoperative PAN இருந்தால் என்ன பிரச்சினைகள்?
- TDS/TCS அதிக விகிதத்தில் அதிகம் பிடித்தம் செய்யப்படும்
- Tax Refund கிடைக்காது
- Refund-க்கான வட்டி தொகை கிடைக்காது
PAN 2.0-க்கு புதிய கார்டு தேவையா?
- இல்லை! பழைய PAN கார்டுகள் செல்லுபடியாகும்.
- தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால் மட்டுமே புதிய PAN கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
- PAN 2.0-ல் தகவலை மேம்படுத்தினால், இலவசமாக e-PAN (QR Code உடன்) மின்னஞ்சலில் கிடைக்கும்.
- Physical PAN கார்டு வேண்டுமென்றால் ரூ. 50 செலுத்த வேண்டும்.
NRI-களுக்கான PAN விண்ணப்பம்: Form 49A நிரப்பி, ₹994 (விண்ணப்ப கட்டணம் + வெளிநாடு அனுப்பும் கட்டணம்) செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | வெறும் 100 ரூபாய் போதும்.. OTT தளத்தில் புது படங்களை பார்க்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









