Jio, Airtel and Vi OTT Plan: ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் பல ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிரியது. இந்த ரீசார்ஜ் திட்டங்களை நாம் நமது தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். அந்தவகையில் நீங்கள் ஓடிடியில் வலைத் தொடர்கள் அல்லது திரைப்படங்களைப் பார்க்க விரும்பினால், அதற்கு நீங்கள் தனித்தனி சந்தா எடுக்கத் தேவையில்லை.
இந்நிலையில் தற்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு வெறும் ரூ.100க்கு OTT இன் பலனை வழங்குகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் நிறுவனம் எவ்வளவு ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பதை இப்போது இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஜியோவின் ரூ.100 ரீசார்ஜ்
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.100க்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவைப் பெறுவார்கள். வெறும் ரூ.100 செலுத்துவதன் மூலம், நீங்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை மட்டுமல்ல, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டாவை வசதியையும் பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில், இந்த சலுகை உங்களுக்கு சிக்கனமான தேர்வாக இருக்கும். ஜியோவின் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். அதாவது, ஜியோஹாட்ஸ்டார் சந்தா செலுத்துவதன் மூலம், நீங்கள் வலைத் தொடரையும் அனுபவிக்க முடியும். இருப்பினும், டேட்டா தீர்ந்துவிட்டால், இணைய வேகம் 64kbps ஆகக் குறையத் தொடங்கும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்தத் திட்டத்தில் காலிங் அழைப்பு மற்றும் SMS சேவையை பெறமுடியாது. நீங்கள் 5GB மட்டுமே பெற முடியும்.
ஏர்டெல்லின் ரூ.100 ரீசார்ஜ் திட்டம்
செல்லுபடி காலம்- 30 நாட்கள் ஆகும்
டேட்டா- 5GB
OTT-JioHotstar மொபைல் சந்தாவைப் பெறுவீர்கள்
வாய்ஸ் அழைப்பு மற்றும் SMS சேவை கிடைக்காது.
வியின் ரூ.101 OTT ரீசார்ஜ் திட்டம்
செல்லுபடி காலம்- 30 நாட்கள் ஆகும்
டேட்டா- 5GB
OTT-JioHotstar மொபைல் சந்தா
வாய்ஸ் அழைப்பு மற்றும் SMS சேவை வசதி கிடைக்காது.
மேலும் படிக்க | JEE தேர்வு எழுதிய ChatGPT: மார்க் பார்த்து மயங்கிய மாணவர்கள், AIR எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









