Jio vs Airtel vs Vi vs BSNL: 30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க

Jio vs Airtel vs Vi vs BSNL Recharge Plan: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனத்தின் 30 நாள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் எது சிறந்தது என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 13, 2025, 05:14 PM IST
  • நிறுவனத்தின் 30 நாள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம்
  • ஜியோ ரூ.335 திட்டம்
  • ஏர்டெல் ரூ.379 திட்டம்
Jio vs Airtel vs Vi vs BSNL: 30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க

Jio vs Airtel vs Vi vs BSNL Recharge Plan: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனத்தின் 30 நாள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் எது சிறந்தது என்று பார்ப்போம். 

நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று தான் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகும். இந்த நிறுவனங்கள் இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் எந்த நிறுவனம் அன்லிமிட்டட் காலிங், அதிக டேட்டா, ஓடிடி சலுகைகளை தருகிறது என்பதை எப்போதும் மக்கள் கம்பேர் செய்து வருகின்றனர். 

டெலிகாம் நிறுவனங்கள் போட்டி 
பயர்களை கவர, ஒவ்வொரு நிறுவனமும் அவ்வப்போது சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. அதே நேரத்தில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நன்மைகள் நிறைந்த மலிவான திட்டங்களை வழங்கி வருகிறது. 

இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் இரண்டு சிம் கார்டுகளை வைத்துள்ளீர்கள் என்றால், எந்த ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

ஜியோ ரூ.335 திட்டம் 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது பயனர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வருகின்றது. அவற்றில் ஒன்று தான் ரூ.335 திட்டம் ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் வரம்பற்ற அழைப்புகளை பெறலாம். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. டேட்டாவை பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் 25 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் இலவச அணுகலும் கிடைக்கும். 

ஏர்டெல் ரூ.379 திட்டம்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியை தருகிறது. இந்த திட்டத்தில், அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் 30 நாட்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள். இது தவிர, டேட்டாவை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். அதாவது, மொத்தம் 60 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச அணுகலும் கிடைக்கும். 

வோடஃபோன் ஐடியா ரூ. 379 பிளான் 
வோடஃபோன் ஐடியா, அதன் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 379 ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது. இந்த திட்டத்தில், அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள். இது தவிர, தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதுமட்டுமின்றி இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை அன்லிமிட்டட் டேட்டாவை இலவசமாக பயன்படுத்தலாம். மேலும், மாதத்துக்கு இரண்டு முறை தலா ஜிபி டேட்டாவை Vi ஆப் மூலம் கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம். 

BSNL ரூ.299 திட்டம் 
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 299 ரூபாய் ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது. BSNL-இன் இந்த திட்டம் மற்ற நிறுவனங்களை விட மிகவும் மலிவானது. இந்த பிளானில் அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 இலவச SMS வசதியைப் பெறுவார்கள். இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டாவும் இலவசமாக பெறலாம். 

மேலும் படிக்க | Senior Citizen Mobile App : மூத்த குடிமக்கள் செயலி குறித்த முக்கிய அறிவிப்பு - தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் வேகமாக புக் செய்வதற்கான புதிய வழிமுறைகள்..!!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News