JioHotstar Free Subscription: சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா இணைந்து ‘ஜியோஹாட்ஸ்டார்’ என்ற புதிய OTT தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ள நிலையில், போட்டிகளை ரசிக்க ரசிகர்கள் இலவச ஸ்ட்ரீமிங் விருப்பங்களையும் சிறப்பு சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் சூழ்நிலையில், ஜியோஹாட்ஸ்டார் இலவச அணுகலை வழங்கும் ஜியோ மற்றும் வோடபோன் இந்தியாவின் மலிவான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்...
ஜியோவின் ரூ.195 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் ரூ.195 டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியது. இது மூன்று மாத இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. டேட்டா-ஒன்லி ஆட்-ஆன் திட்டமான இது 15ஜிபி 4ஜி/5ஜி டேட்டாவுடன் வருகிறது. மேலும் விளம்பர ஆதரவு JioHotstar மொபைல் திட்டத்திற்கான இலவச அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. இதில் பயனர்கள் HD தெளிவுத்திறனில் உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.
ஜியோவின் ரூ.949 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த வாரம் ரூ.949 என்ற கட்டணத்திலான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள். இது 2ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் மூன்று மாத இலவச JioHotstar சந்தாவையும் வழங்குகிறது.
வோடபோன் ஐடியா ரூ.151 திட்டம்
ரிலையன்ஸ் மட்டுமல்லாது வோடபோன் நிறுவனமும், இலவச JioHotstar சந்தா திட்டங்களை வழங்குகிறது. Vi நிறுவனம் 4ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.151 ஆட்-ஆன் திட்டத்தில் இந்த வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், 3 மாதங்களுக்கு JioHotstar மொபைலின் இலவச சந்தா கிடைக்கும்.
வோடபோன் ஐடியா ரூ.169 திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.169 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 8 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதில் 3 மாதங்களுக்கு JioHotstar மொபைலின் இலவச சந்தா கிடைக்கிறது.
வோடபோன் இந்தியா ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின் நிலையான ப்ரீபெய்ட் திட்டத்தை விரும்பினால், ரூ.469 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். வோடபோனின் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் வருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் 3 மாதங்கள் இலவச JioHotstar சந்தாவைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | மார்ச் மாதம் அறிமுகம் ஆகவுள்ள அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்: முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









