வெறும் ரூ.198 திட்டம், 40 நாட்களுக்கு அன்லிமிடெட் வசதிகளை பெறலாம்

இந்திய மக்கள் மற்றும் தனியார் டெலிகாம் நிறுவன பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ. 198 விலையில் ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 17, 2025, 09:48 PM IST
  • BSNL-ன் மலிவான திட்டம், நீண்ட செல்லுபடியாகும் காலம்
  • பல மலிவு விலை திட்டங்களை தந்து வருகிறது.
வெறும் ரூ.198 திட்டம், 40 நாட்களுக்கு அன்லிமிடெட் வசதிகளை பெறலாம்

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற தனியார் நெட்வொர்க்குகளின் சமீபத்திய விலை உயர்வுகளால், பல மொபைல் பயனர்கள் இப்போது மிகவும் மலிவு ரீசார்ஜ் திட்டங்களுக்காக பிஎஸ்என்எல் பக்கம் மாறத்துவங்கியுள்ளனர். இதனால், BSNL நெட்வொர்க்கிற்கு பல லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source

இன்று நாட்டில் முக்கியமாக இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன, இரண்டும் தனியார் நிறுவனங்கள். இரண்டிலும் நல்ல எண்ணிக்கையிலான பயனர்கள் உள்ளனர், இந்த தனியார் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்ந்து வருவதால், வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகிறது, ஆனால் பிஎஸ்என்எல் இன்றும் கூட பல மலிவு விலை திட்டங்களை தந்து வருகிறது.

BSNL-ன் மலிவான திட்டம், நீண்ட செல்லுபடியாகும் காலம்
உங்களிடம் BSNL சிம் கார்டு இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. BSNL ஒரு புதிய மற்றும் மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த BSNL திட்டத்தின் விலை ரூ.198 ஆகும். மேலும் இந்த திட்டத்தில் 40 நாட்கள் வேலிடிட்டியை நீங்கள் பெறுவீர்கள். இந்த BSNL திட்டத்தில், நீங்கள் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுவீர்கள், அதாவது, இந்த டேட்டாவை 40 நாட்கள் முழுவதும் பெறுவீர்கள். 2 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, 40kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பெறுவீர்கள். இந்தத் திட்டம் பற்றிய தகவல்களை BSNL இன்ஸ்டாகிராமில் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் அழைப்பு வசதி இல்லை, ஏனெனில் இது ஒரு டேட்டா திட்டம் ஆகும்.

BSNL ரூ.1,499 ரீசார்ஜ் திட்ட சலுகை
சில நாட்களுக்கு முன்பு, ஆயுதப்படைகளின் துணிச்சலைப் போற்றும் வகையில் சிறப்பு ரீசார்ஜ் சலுகையை நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த சலுகை ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், வாடிக்கையாளர் ரூ.1,499 ரீசார்ஜ் செய்தால், அந்தத் தொகையில் 2.5% பாதுகாப்புத் துறைக்கு நன்கொடையாக வழங்கப்படும். இதனுடன், பயனருக்கு 2.5% கேஷ்பேக் வடிவில் திரும்பப் கிடைக்கும். இந்த சலுகை ஜூன் 30 வரை வேலிடிட்டி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi vs BSNL: 30 நாட்கள் ரீசார்ஜ் பிளான்.. எது பெஸ்ட்? உடனே சூஸ் பண்ணுங்க

மேலும் படிக்க | AC வாங்க சரியான நேரம்.. பாதி விலையில் விற்பனையாகும் TATA ஏசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News